ஒரு நாள் சர்வதேச பல்லுயிரிய கருத்தரங்கு
ஸ்ரீ நாராயண குரு பெண்கள் கல்லூரி, கொல்லம்
கடந்த பிப்ரவரி மாதம் 25ல் கேரளாவின் கொல்லத்தில் உள்ள ஸ்ரீ நாராயண குரு பெண்கள் கல்லூரியில் ஒரு நாள் சர்வதேச பல்லுயிரிய கருத்தரங்கிற்கு சென்றேன். சுமார் 65 பேர் கலந்து கொண்டனர். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் வளங்களை சொல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சிறிய புகைப்பட கண்காட்சி, வினாடி வினா நிகழ்ச்சி, தொடர்ந்து கருத்தரங்க மைய பேச்சு என சிறப்பாக நிகழ்வை...