Tuesday, 28 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 47

புகைப்பட தொகுப்பு : 


1. சேலம் - சேர்வராயன் மலையின் காட்டு எலிகள் குறித்த களப்பணியின் போது..   


2. கேரளத்தின் புல்வெளி காட்டில் "தவளைகளை" தாக்கும் புஞ்சான் நோய் குறித்த களப்பணியின் போது ..  3. தட்டகாடு பறவைகள் சரணாலயத்தில் முனைவர். சுகதன் அவர்களுடன்..   

4. மங்களா தேவி கண்ணகி கோவில் செல்லும் வழியில் எடுத்தது ....


5. மங்களா தேவி கோவிலில் எனது குழுவுடன் ..6. மகாதேவ் கோவில் - கோவா. காட்டு தவளைகள் குறித்த களப்பணியின் சிறிய இடைவெளியில் எடுத்தது ...  7. கொடைக்கானலின் கூக்கால் சோலைக் காடுகள் செல்லும் வழியில் ..    


8. கிழக்குத் தொடர்ச்சி மலையின் "செஞ்சி" பகுதியில் களப் பணியின் போது ...  அன்புடன்
பிரவின் குமார்
கன்னியாகுமரி 

தொடரும் நம் சூழல் பயணங்கள் 46

கட்டுரை:

"முள்ளெலிகள் - அறிய வேண்டிய உயரினங்கள்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை "காடு இதழில்" பிரசுரமாகி உள்ளது.  நன்றி.

இப்படிக்கு,
பிரவீன் குமார்
ஆய்வு மாணவர்
நூருல் இஸ்லாம் பல்கலைகழகம்
கன்னியாகுமரி 

தொடரும் நம் சூழல் பயணங்கள் 45

வௌவால் குறித்த தொகுப்பு:

வௌவால்களைப் பற்றி நான் எழுதிய சிறிய தொகுப்பு "மின்மினி " என்ற குழந்தைகளுக்கான சிற்றிதழீல் வெளியாகியது.  


   
நன்றி.

இப்படிக்கு,

பிரவீன் குமார்
ஆய்வு மாணவர் 
நூருல் இஸ்லாம் பல்கலைகழகம்  
கன்னியாகுமரி 

தொடரும் நம் சூழல் பயணங்கள் 44

வெளவால்கள் பாதுகாப்பு நிகழ்ச்சி கொடைக்கானல்

கடந்த 2014 ல் ஒரு நாள் வெளவால்கள் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி ‘என் ஸ்கூல் சத்ய சுரபி” (My school sathya surabi) யில் நடைபெற்றது.  இதை பழனி மலை  பாதுகாப்புக் கழகமும், ஜூ அவுட்ரீச் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தது.  மொத்தம் 89 மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.  முதலில் ஒரு சில மாணவ – மாணவிகள் பெயர், வகுப்பைக் கேட்டறிந்தேன்.  பின்பு இந்தியாவும், காடுகளும் 5 வகை உயிர் குழுக்கள் , அரிய வகை விலங்குகள் பற்றி சொல்லிவிட்டு "காடுகள்" வீடியோவைக் காட்டினேன்.  பின்பு மலை அணில், வெளவால், கீரி, முள்ளெலி குறித்த “வகுப்பை" நடத்தினேன்.  தொடர்ந்து, வெளவால்கள் பற்றி சொல்வதற்கு முன்பு பாலூட்டி என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? சிறிய பெரிய பாலூட்டிகளுக்கு உதாரணம் ஏது? எனச் சொல்லச் சொன்னேன்.
பின்பு அனைவரையும் 5 குழுக்களாக பிரித்தேன். குழுவிற்கு தலைவர் ஒருவரை நிர்ணயித்தேன். வெளவால் தகவல் பெட்டகத்தை அனைவருக்கும் வழங்கினேன்.  தொடர்ந்து வெளவால்களின் வகைகள், இனம் கண்டறிய வேண்டிய பாகங்கள், உலகின் பெரிய, சிறிய வெளவால் என தொடர்ந்து, அவற்றின் சிறப்பியல்புகளை பற்றி சொல்லி முடித்தேன். 10 நிமிட இடைவெளி கொடுத்தேன். 
பின்பு குழுத் தலைவர் வகுப்பின் கரும்பலகை முன்னால் வந்து வெளவால் குறித்த தகவல்களை சொல்லிவிட்டு சென்றனர். தொடர்ந்து உலகின் மிக பெரிய இறக்கையுடைய "நிக்கோபார்" இராட்சத வெளவால் குறித்த வீடியோ ஒன்றை காட்டிய பின்பு அதே குழுக்கள் ‘குழு வாண்ம் தீட்டுதல் என்ற செயல்பாட்டை நடத்தினேன். 
நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள காட்டுயிர்களை எப்படி கண்டறிவது என்று சொன்னேன்.  மேலும் இவர்களுக்கு ZOO Outreach அமைப்பினர் வழங்கிய வாழ்த்து அட்டைகளை வழங்கினேன்.

1. மலை அணில் குழு
2. இருவாச்சி குழு

என இரண்டு மாணவர் குழுக்களை ஆரம்பித்தோம். இந்த குழுக்கள் வரும் நாட்களில் வனம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவர். அனைவரும் உறுதிமொழி செய்து கொண்டு விடைபெற்றோம்.


என் ஸ்கூல் சத்ய சுரபி பள்ளிக் குழந்தைகளின் ஆர்வமும், இயற்கை மேல் உள்ள அன்பும் மென் மேலும் வளர, பெருக வாழ்த்துக்கள். 
 
நன்றி.

இப்படிக்கு,
பிரவீன் குமார்
ஆய்வு மாணவர்
நூருல் இஸ்லாம் பல்கலைகழகம்
கன்னியாகுமரி.

தொடரும் நம் சூழல் பயணங்கள் 43பல்லுயிரியப் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

பல்லுயிரியப் பாதுகாப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை இராமநாதபுரம் மாவட்டத்தின் TDA  கலை, அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தேன்.  இது 13 பிப்ரவரி அன்று நடைபெற்றது.  

சுமார் 340 மாணவ – மாணவிகள் புhpந்து கொள்ளும் வண்ணம் பல்லுயிரியப் பாதுகாப்புக் கருத்து வழங்குவது தான் இந்த பட்டறையின் நோக்கம்.  ஆனால் அதையும் தாண்டி மாணவ – மாணவிகள் வன விலங்குகள், தாவரங்கள் காடுகள் குறித்த மேம்பட்ட அறிவை இந்த பட்டறை வாயிலாகக் கற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.  அதைத் தொடர்ந்து நான், இன்று நாம் என்னென்னக் கற்றுக் கொள்ளப் போகிறோம் என பட்டியலிட்டுவிட்டு, நம்மை சுற்றியுள்ள சில தாவர விலங்குகள் பற்றிச் சொன்னேன்.  பல்லுயிம் பற்றியும், ஏன் காப்பாற்றப்பட வேண்டும் எனவும் சொன்னேன்.
பின்பு இன்று சுற்றுசூழல், வன விளங்கு குறித்த  புத்தகக் கண்காட்சி, வகுப்பறை விவாதங்கள், குழு கலந்துரை யாடல், வீடியோக்கள் போன்றவற்றை மாணவர்கள் ஆர்வமுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்.முதலில் ராமநாதபுரத்தில் அதிகம் காணக்கூடிய தாவர, விலங்குகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  பின்பு அழிவில் காடுகள் என்ற வீடியோவைக் காட்டினேன்.  அழிந்த மற்றும் ஆபத்திலுள்ள சில உயிhpனங்களை பட்டியலிட்டேன்.  டோ டோ பறவையின் வீடியோ ஒன்றைக் காட்டினேன்.மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை பற்றியும் அங்குள்ள தாவரங்கள் , விலங்ககள் குறித்த பொதுவான தகவல்களைச் சொன்னேன்.  பின்பு நன்னீர் எப்படி உருவாகிறது.  நன்னீரை நம்பி வாழும் விலங்குகள் 300 மில்லியன் மக்கள், தாவரங்கள், விலங்குகள் குறித்து, சொன்னேன்.  பின்பு நன்னீர் எப்படி உருவாகிறது.  பின்பு நன்னீர் ஆதாரங்கள் நன்னீர் சொன்னேன்.விலங்குகளின் சூழல் நன்மைககளைச் சொன்னேன்.  (எகா) காட்டு மாடு, காட்டு கீரி, வெளவால், நத்தைகள், மீன்கள் அலுங்கு என பல தகவல்களைச் சொன்னேன். 

பின்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் தனித்துவமான இடங்கள், தனித்துவமான இனங்கள் குறித்து விளக்கினேன்.  பின்பு காடுகளும், விலங்ககளும்  அழிய சில காரணங்கள் . சில

1. காட்டுத் தீ
2. குப்பைகள்
3. கால நிலை மாற்றம்
4. காணாமல் போகும் விவசாய நிலங்கள் 
5. பொருளாதார வளர்ச்சி
6. முறையற்ற சுற்றுலா
7. வேட்டை

பின்பு நீர் வாழ்த் தாவரஙகளைப் பற்றி அட்டைகள் மூலமாக விளக்கினேன்.  முக்கியமாக வகைகள் மற்றும்  பயன்கள் பற்றி சொன்னேன்.  

சிறிய தேநீர் இடைவெளிக்கு பின்பு தாவர மருந்துகளை எப்படி தயாரிப்பது என்று 10 நிமிடம் சொன்னேன்.  பின்பு 2 வீடியோக்களைக் காட்டினேன்.  மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு ஆறு குழுக்களுக்கு ‘விநாடி-வினா’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தேன்.  மற்ற மாணவர்கள் வன விலங்கு குறித்த வீடியோக்களை பார்த்து ரசித்தனர்.நிகழ்ச்சி மாலையில் நிறைவு பெற்றது.  கல்லூரி முதல்வா கலந்து கொண்டார். சிறந்த சார்ட் (presentation) செய்தவர்களுக்கும் ‘விநாடி வினா’ போட்டியில் பங்கேற்ற , வெற்றிபெற்ற முதல் மூன்று குழுவினருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  இந்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடந்து முடிந்தது.

இப்படிக்கு,
ஆர்.பிரவின் குமார்
கன்னியாகுமரி 

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 42


வெளவால்கள் பாதுகாப்பு குறித்த மூன்று நாள் பயிற்சிப் பட்டறை 
சோர்லா காடு – கர்நாடகா

கடந்த சனவரி 29,30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்களும் ‘வெளவால்கள் பாதுகாப்பு குறித்த’ களப்பணியுடன் கூடிய பயிற்சிப் பட்டறை சோர்லா என்ற கர்நாடக காட்டில் நடைபெற்றது.  இதில் நான் கலந்து கொண்டேன். மொத்தம் 23 பேர் வந்திருந்தனர்.முதல் நாள் “பயிற்சியாளர்களின்” வெளவால் அறிமுகத்துடன் ஆரம்பமானது.  பரிணாம வளர்ச்சி, உணவு, வாழிடம், பகல் உறக்கம் பற்றி சொன்னார்கள்.  பின்பு மதிய உணவிற்குப் பின்பு வெளவாலை ஏன் பிடித்து ஆராய வேண்டும்ட, எப்படிப் பிடிப்பது, எளிய முறைகள், கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என பல வகைப்பட்ட களப்பணி சம்பந்தமானவை விவரிக்கப்பட்டன.  மிஸ்ட் வலைகள், ஹார்ப் வலைகள் பற்றி சொன்னார்கள்.  இந்த இரண்டு வகை வலைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.  மாலை நேரத்தில் ஒரு முறை ‘எப்படி வலைகளை’ பயன்படுத்துவது என நாங்கள் செய்து பார்த்தோம்.  பின்பு பொழுது இருட்டும் நேரம் 23 பங்கேற்பாளர்களும் காட்டிற்கு சென்றோம்.
பின்பு அங்கு வலைகளை ரெடி செய்து விட்டு சற்று தூரமாக அமர்ந்தோம்.  சிறிது நேரத்திற்கு பிறகு வலையில் ஒரு சிறிய வெளவால்.  ஆ!  ஒரே சந்தோஷம் கையில் கையுறைகளை இட்டுவிட்டு வலையிலிருந்து  லாவகமாக பிடித்து, பின்பு சிறிய துணிப்பைக்குள் போட்டனர்.  பின்பு அப்படியே அமர்ந்து ஒவ்வொருவராக வெளவாலை வெளியே எடுத்துக் கையில் பிடித்துப் பழகினோம்.  நானும் தான்.  எனக்கு என்னவோ பெரிய  சந்தோஷம்.  இந்த வெளவால் பத்திதானே ஊர் ஊரா,  எல்லா குழந்தைகள் கிட்டேயும் போய் வகுப்பெடுக்கிறேன்.  ஆனால் இன்னைக்கு அதை நான் தொட்டு, தூக்கி, கொஞ்சி, அதைப் பத்திபடிக்கிறோம் என்று நெனச்சாலே ஒரே பூரிப்புதான். 
அப்புறம் திருகுமானியை பயன்படுத்தி அதன் குறிப்பிட்ட பாகங்களை அளவெடுத்தோம்.  பின்பு இறக்கையை விhpச்சுப் பார்த்தோம்.  அதன் உடல் எடையை பார்த்தோம்.

எல்லா பார்த்து முடிந்ததும் இதை இனம் கண்டுபிடித்து சொன்னார்கள். அங்கேயே அந்த வௌவாளை பறக்க விட்டு விட்டோம்.  இவைகள் பறக்கும் போது மீயொலிகள் மூலமாக சப்தம் எழுப்பிக்கொண்டே செல்லும் என்று சொன்னார்கள். இது ஏற்கனவே எனக்குத் தெரிந்திருந்தாலும் அவர்களுடைய ‘ வெளவால் ஒலிவாங்கி’ பெட்டி மூலமாக மீயொலியை கேட்டேன். அப்புறம் நாங்க எங்களோட ரீசார்ட்டுக்கு திரும்பினோம். 
மறுநாள் கானொலி “வெளவால் வகைப்பாட்டியில்” மற்றும் பிரிவுகள் குறித்த வகுப்பு ஆரம்பமானது.  இதில் வெளவாலின் சில குணாதிசியங்கள், சில பகுதிகள், வெளவாலை இனம் கண்டறிய உதவுவதாகக் கூறினார்கள்.  அதாவது அதனுடைய காது வடிவம், வால், மூக்கு, தோல் இறக்கையின் நீளம், முடியின் வண்ணம், அமைப்பு, கர்ப்பம் மற்றும் பாலினம் ஆகும்.  9 வகையான வெளவால் குடும்பங்கள் இந்தியாவில் உள்ளதாகவும், மொத்தம் இனங்கள் வசிக்கின்றன எனவும் சொன்னார்கள்.

பின்பு காலை 9 மணிக்கெலலாம் நாங்கள் காட்டின் அருகிலுள்ள வெளவால் குகைக்கு புறப்பட்டோம்.
சுமார் 15 நிமிட நடைக்கு பிறகு குகையை அடைத்தோம்.  நான் 1500க்கும் மேலான வெளவால்கள் ஒரே இடத்தில் பார்ப்பது இது தான் முதல் தடவை எனக்கு ஒரே பிரம்மிப்பு. எங்கு திரும்பினாலும் எனக்கு வெளவால்களே தென்பட்டன. அவை வேகமாக அங்கும், இங்கும் பறந்த வண்ணம் இருந்தது.  இவைகள் உருவத்தில் ஒவவொன்றும் ஒவ்வொரு மாதியாக இருந்தது.  இதில் ‘மினியாப்டிரஸ்’ என்ற வகையும், “ரைனோலபஸ்” என்ற வகையையும் சிறிய கையடக்க வலையை வைத்துப் பிடித்தோம்.  ஒரே வீச்சில் சுமார் 7 வெளவால்கள் வலையில் விழுந்தன.  அவற்றை துணிப்பைக்கு மாற்றினோம். 

இதில evening bats எனும் சாயங்காலம் திரியும் பூச்சி திண்ணி வெளவால்தான் அதிகம் பிடிப்பட்டது. மாணவர்கள் சிலர் இதை கையில் பிடித்து இனம் கண்டறிய முன்றனர்.  பின்பு களக்கையேட்டில் குறிப்பெடுத்தனர்.  இதன் எடை 14 கிராம் தான் இருந்தது.  சிறியதாக வால் கூட இருந்தது. பகலில் ஓய்வெடுக்கும் இந்த வகை வெளவால், பொழுது சாயும்போது தொடங்கி  நடு இரவு வரை பூச்சிகளைத் தேடி காட்டில் திரியும்.  பூச்சிகளே இவற்றின் பிரதான உணவு.  இவற்றின் "மீயொலிச்" சப்தங்களை ஒலி உள்வாங்கிப் பெட்டி மூலமாக பதிவு செய்தோம்.  இது கேட்டதற்கு ‘டக் டக் டக்’ என்று இருந்தது.  பின்பு அடுத்த வகை வகை வெளவால் பிடித்தோம்.  இதை இறக்கை மடக்கி வெளவால் எனக் கூறவும் செய்யலாம்.  ஏனெனில் இது தன்னுடைய இறக்கiயின் அடிப்பகுதியை மடக்கி வைத்துக்கொள்ளும்   ஒரு சிறப்பு குணம் இந்த வெளவாலுக்கு, இதன சப்தத்தையும் பதிவு செய்து விட்டு பறக்க விட்டோம்.

பின்பு நாங்கள் மதிய வேளையில் மரபியல் மூலமாக வெளவால்களைப் படிக்க என்ன தேவை? ஏப்படி என கூறினார்கள்.  பின்பு மாலை 5 மணிக்கெல்லாம் கிளம்பி வெளவால் பிடிக்க காட்டிற்குள் சென்றேhம்.  அங்கு 6 கிராம் எடையுள்ள “ரைனிலோபஸ்” பிடித்தோம்.  இரவு 10.10 மணிக்கு “வெளவால் - மீயொலி’ குறித்த வகுப்பு நடந்தது.  நான் வகுப்பில் தூங்கி விட்டேன்.
மறுநாள் காலை வெளவால் பாதுகாப்பு, வருங்கால செயல்திட்டம் பற்றி ‘திரு. ராகுல்’ விளக்கினார்.  பின்பு வெளவால்-கணிணி மென்பொருள் விளக்கம் தரப்பட்டது.
புது நண்பர்கள் பலரை சந்தித்தேன்.  எனக்கு பயனுள்ளதாய் இருந்தது.  காட்டின் ஊடே மூன்று நாள், நிசப்தத்தின் அமைதியிலும், வெளவால்களின் மீயொலியிலுமே சென்றது.

இந்த நிகழ்ச்சி செல்ல அனுமதி வழங்கிய என் அலுவலகத்திற்கு  Indian Bat Conservation Research Unit மற்றும் கோவை ஜூ அவுட்ரீச் அமைப்புகளுக்கும் எனது சிறப்பு நன்றிகள். குறிப்பாக கோவை "சிக்ஸ்த் சென்ஸ்" அமைப்பினருக்கும் நன்றிகள். சிக்ஸ்த் சென்ஸ் அமைப்பு என் பயணத்திற்கும். களப்பணிக்கான  பணத்தை  கொடுத்து உதவினர். 
அன்புடன், 
பிரவின்குமார்
கன்னியாகுமரி 

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 41


வெளவால்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி் - சிவகாசி


கடந்த பிப்ரவரி  9 அன்று வௌவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிவகாசியிலுள்ள ‘சுருதி வித்யோதயா’ பள்ளியில் நடத்தினேன்.  இந்த நிகழ்ச்சி வெளவால்களை அறிந்து கொள்வதும், பாதுகாப்பதற்குமானது.  நிகழ்வை பள்ளி முதல்வர் துவக்கி வைத்தார்கள்.  முதலில் என்னைப் பற்றி சொல்லிவிட்டு ஒரு சில மாணவ-மாணவிகளை அறிமுகம் செய்து கொள்ளச் செய்தேன்.  தங்கள் பெயர், வகுப்பு, கடைசியாக தாங்கள் வெளவால்களைப் பார்த்த இடம் போன்றவற்றைச் சொன்னார்கள்.  பின்பு அழிவில் காடுகள் வீடியோவைக் காட்டி விட்டு 5 வகை உயிர்க் குழுக்கள் பற்றியும், உணவுச் சங்கிலி பற்றியும் சொன்னேன்.  பின்பு மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம், அங்குள்ள பல அரிய விலங்குகள் பற்றியும் சொன்னேன்.  பின்பு நம் காடுகளிலிருந்து அழிந்து போன சிவிங்கிப் புலி பற்றி சொன்னேன்.  
பின்பு 6 குழுக்களுக்கிடையில் ஒரு குழு விளையாடச் செய்தேன். அப்புறம், பாலூட்டிகள் என்றால் என்ன? வரையறை, இந்திய பாலூட்டிகள், சாதாரணமாக பார்க்கக் கூடியவை, அரிதாய் காண்பவை என எடுத்துச் சொன்னேன்.  பின்பு மீண்டும் 6 குழுக்களைப் பிரித்து தலைவரை தேர்ந்தெடுத்தேன். நான் ஒவ்வொரு குழுவிற்கும், வெளவால் தகவல் பெட்டகத்தை வழங்கினேன்.  
பின்பு வெளவால் பற்றி பல தகவல்களை வரிசையாக விளக்கினேன்.  படங்கள், அட்டைகள், மற்றும் உதாரணங்களுடன் நான் விளக்கினேன். பின்பு 10 நிமிட நேரம் கொடுத்தேன்.  குழுத் தலைவர்களும் ஒருவர், ஒருவராக 3-5 நிமிடம் வரை வெளவால்கள் பற்றியும், பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் சொல்லி கைத்தட்டல்களுடன் சென்றனர்.
வெளவால் பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் ஒரு உறுதி மொழி எடுத்தோம். பின்பு 3 படங்களுடன் வகுப்பு நிறைவடைந்தது. மாணவர்களின் ஈடுபாடும் ஆர்வமும் சிறப்பாக இருந்தது.  நிகழ்ச்சியை முடித்துவிட்டு நான் சிவகாசி எக்ஸனேரா. லதா அபிரூபன் அவர்களைச் சந்தித்துவிட்டு சிவகாசியிலிருந்து பேருந்தில் புறப்பட்டேன். அனைவரின் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி இங்கு சிறப்பாக நடந்து முடிந்தது.

அன்புடன்
ஆர். பிரவின் குமார்.
கன்னியாகுமரி.


தொடரும் நம் சூழல் பயணங்கள் 40நன்னீர் பல்லூயிரியம் - குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - 
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

கடந்த பிப்ரரி 9ம் தேதி, சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தேன்.  இதில் இளநிலை உயிர் தொழில் நுட்ப மாணவர்களும், பாலிடெக்னிக் மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர். திரு.கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை நடத்த சிவகாசி எக்ஸனோரா திருமதி. லதா அபிரூபன் அவர்களின் உதவி சிறப்பானது.

நிகழ்ச்சியில் நன்னீர் வாழ்வாதரங்கள், பாதுகாக்க வேண்டியதன் அவசியம், நன்னீரில் வாழும் சில வகை உயிரிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பற்றி சில செய்திகளை நான் கூறினேன்.  முதலில் ஒரு சிறிய அறிமுகத்தோடு வகுப்பை தொடர்ந்து நன்னீர் அவசியம் குறித்துச் சொன்னேன்.  பின்பு நன்னீர் வாழ்வாதாரம் பற்றியும் உயிரினங்கள் பற்றியும் எடுத்துச் சொன்னேன்.  பின்பு மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி தகவல்களைச் சொல்லிவிட்டு, மேற்கு தொடர்ச்சி மலை வரைபட நிகழ்வை இரண்டு குழுக்களுக்கிடையில் நடத்தினேன். 

1. மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாநிலங்கள். 
2 . மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய ஆறுகள்.  
மாணவ- மாணவிகள் இந்த நிகழ்வில் ஆர்வமாக கலந்து கொண்டனர்.  சிறிய வீடியோ ஒன்றைக் காட்டிவிட்டு, பின்பு 5 வகை உயிர் குழுக்களைப் பற்றிச் சொன்னேன்.  பின்பு தட்டான்கள், நத்தை , சிலந்தி, நண்டுகள், மீன்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் பற்றிச் சொன்னேன்.  அவற்றின் சூழல் நன்கைளை அவர்களுக்கு புரியும் வண்ணம் சுலபமாக விளக்கினேன்.பின்பு மேற்கு தொடர்ச்சி மலையின் சில தனித்துவமான இடங்களில் வசிக்கம் சில தனித்துவமான உயிரினங்கள் பற்றியும் அவைகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் சுருக்கமாகச் சொன்னேன்.


பின்பு சோலைக் காடுகளைக் காப்போம்’ என்ற வீடியோவை திரையிட்டு காட்டினேன். வர்களிடம் குழு உரையாடலைக் ஆரம்பித்தேன்.  “நம் நன்னீர் பாதுகாப்பை உறுதி செய்ய முதலில் நாம் செய்ய வேண்டியது எது?” என்று கேட்டதும் பதில் சட்டென வந்தது.  "சார், நம்ம குளங்களை தூர் வாறனும்"  "நம்ம நன்னீரை அசுத்தப் படுத்தக் கூடாது". "நாம நன்னீர் நிலைகளை சுத்தி மரம் நட வேண்டும்" "தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தணும்" எனச் சொன்னார்கள் கைத் தட்டல்களைப் பெற்றனர்.
மேலும் அடிப்படை ஆராயச்சிகள், நன்னீர் மேலாண்மை மற்றும் சட்டங்கள் மூலமாக நன்னீர் நிலைகளையும் அதை நம்பியுள்ள உயிர்களையும் பாதுகாக்க முடியும் எனச் சொன்னேன். பின்பு காந்தியடிகள் மற்றும் தலாய் லாமா அவர்களின் சூழல் சிந்தனைகளைச் சொல்லிவிட்டு, அனைவரும் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்.அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. ஈகோ கிளப், சிவகாசி எக்ஸ்னோரா மற்றும் ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரிக்கும் என் நன்றிகள்!

பிரவீன் குமார்,
கன்னியாகுமரி.