About

Saturday 21 November 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 52:


G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். 

கடந்த சூலை மாதத்தில் ஒரு "முழு" நாள் சுற்றுச் சூழல் நிகழ்ச்சியை பழனி மலை பாதுகாப்பு குழுவும், நானும் இணைந்து G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் (கொடைக்கானல் அடிவாரம்) ஏற்பாடு செய்திருந்தோம். இது வெறும் தகவல் சொல்லும் ஒரு வகுப்பாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய எளிய கற்றல் வழிகளை உபயோகித்தோம். மாணவர்கள் அனைவரும் எல்லா வித கற்றல் செயல் பாடுகளில் மிகவும் ஆர்வமாக பங்கேற்றனர். 

பாலூட்டிகள், மீன்கள் பற்றியே அதிகம் நிகழ்ச்சி வடிவமாகப்பட்டிருந்தது. காடுகள், நன்னீர் வாழ் உயிர்கள் குறித்தான விளக்க படங்கள், கானொலி, குழு விளையாட்டு என நிகழ்ச்சி சென்றது.          

1. மாணவர்கள் - குழு விளையாட்டு: எந்த குழு அதிக உயிரினங்களின் பெயர்களை கண்டுபிடிக்கும் என்று பார்க்க இது.



2. குழு 2: பறவைகளை தேடிடும் குழந்தைகள். 



3. குழு 3: மீன்களின் வழங்கு பெயர் என்ன ? என வினவும் மாணவர்கள் 




4. பழனி மலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் 



5. உறுதிமொழி சொல்லும் நம் சிட்டுகள்.  


அனைவரின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது 

அன்புடன் 
பிரவின் குமார் 

0 comments:

Post a Comment