About

Monday 27 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 38


சிறிய பாலூட்டிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி:
கன்னியாகுமரி
“நான் காணும் சிறிய பாலூட்டிகள்” என்ற தலைப்பில் மூன்று மணி நேர விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி  மாவட்டத்திலுள்ள, மிடலக்காடு என்ற கிராமத்திலுள்ள கே.டி.பி மேல் நிலைப் பள்ளியில் நடத்தினேன்.  இந்த நிகழ்ச்சியில் 7ம் மற்றும் 8ம் வகுப்பு மாண- மாணவிகள் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியை கோவை, ஷீ அவுட் ரீச் அமைப்பின் சார்பில் நான் நடத்தினேன்.  இந்த வகுப்பு வெறும் புகைப்படங்கள் மற்றும் விளக்கங்கள் மட்டும் அளிக்காமல் ‘எளிய முறையில் பல ஆக்கப்பூர்வமான கற்றல் செயல் பாடுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.



முதலில் மாணவர்கள் அறிமுகத்தோடு வகுப்பு ஆரம்பமானது. பின்பு பாலூட்டிகள் என்றால் என்ன பாலூட்டிகளுக்கான சிறப்பியல்புகள் மற்றும் வகைகள் எடுத்துக் கூறினேன்.  மேலும் அவர்களிடத்தில், அவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றிக் காணக் கூடிய சிறிய பாலூட்டிகளைப் பற்றி தகவல்களை கேட்டறிந்தேன்.  பின்பு, அனைவரையும் 8 குழுக்காளாகப் பிரித்து, புதிர் விளையாட்டை விளையாடச் செய்தேன்.  அப்படி பேசி அணிகள், கீரீகள், வெளவால்கள், முயல்கள் மற்றும் முள்ளெலிகள் குறித்த தகவல்களை கதை போலச்  சொன்னேன்.  பின்பு காடுகளிலும், காட்டை ஒட்டிய புதர் நிலங்களிலும்  வசிக்கும் மற்றுமொரு விலங்கு ‘அலுங்கு’ பற்றி கேட்டேன்.  பலரும் இதைப் பற்றி கேள்விப் பட்டிருக்கவில்லை. பின்பு அதனுடைய புகைப்படத்தைக் காட்டி அதனுடைய சிறபபியல்புகள் சொல்லி ‘ஐலஷா’ என்ற பாடலை பாடச் செய்தேன்.  


பின்பு மறுபடியும் அனைவரையும் 8 குழுக்களாகப் பிரித்து, குழுவிற்கு ஒரு குழுத் தலைவரை நிர்ணயித்தேன்.  இப்போது, சிறிய சிறிய துணுக்களாக "பாலூட்டி" தகவல்களை சொன்னேன். பின்பு ஒரு வீடியோவை காட்டினேன். 


குழுவிற்கு ஒரு ‘வெளவால் தகவல் பெட்டகத்தை அளித்தேன்.  பத்து நிமிட இடைவெளிக்கு பிறகு குழுத் தலைவர்களை இப்போது பேசத் தயாராக்கினேன்.  குழுத் தலைவர் ஒருவர் ஒருவராக வந்து, மூன்று - நான்கு நிமிடம் சகஜமாக அவர்கள் இன்றைய வகுப்பில் கற்றுக் கொண்ட பாலூட்டிகள் குறித்த தகவல்களை அனைவரின் முன்பும் சொல்லி கைத் தட்டல்களைப் பெற்றுச் சென்றனர்.  பின்பு நாங்கள் அனைவரும் சேர்ந்து வனவிலங்கு பாதுகாப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டோம்.







அப்படியே ஒவ்வொருவராக வகுப்பறையில் நான் காட்சிக்கு  வைத்திருந் சிறிய கண்காட்சியை பார்த்துச் சென்றனர். பள்ளி ஆசியரின் நன்றியுரையுடன் வகுப்பு இனிதே முடிந்தது. இந்த வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள் பலர் அருகிலுள்ள காட்டுப் பகுதியை ஒட்டி வசிப்பவர்கள் அவர்களுக்கு அதிகமாக பிடித்த பட்டாம் பூச்சிகளையும், தும்பிகளைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டே இருந்தனர்.  சிலர் இந்த ஏரிக் கரையில் மீன்களை பார்த்து ரசித்ததாகவும், சிலர் பள்ளி வளாகத்தில் மரக் கன்று வைத்து பராமரிப்பதாகவும் கூறிக் பெருமைப்பட்டனர்.







இந்த குழந்தைகளுக்கு நான் ஏதோ சிறிது தகவல்களைக் கூறச் சென்றிருந்தாலும், இந்த குழந்தைகளிடமிருந்து நான் அதிகம்  கற்றுக் கொண்டேன். இயற்கை மீதுள்ள, அவர்களைச் சுற்றியுள்ள உயரினம் மீதுள்ள பாசம், எதையும் பொறுப்பாக செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை. 

மிக குறிப்பாக ஓவ்வொரு விலங்குகளின் நன்மைகளை குழந்தைகளிடத்தில் சொல்ல சொல்ல, விலங்குகள் மீது கருணை பிறப்பதையும் கவனிக்க முடிந்தது.



இந்த பள்ளிக் குழந்தைகளின் ஆராவாரத்திலும், உற்சாகத்திலும், இணைந்தே நகர்கிறது அவர்களது சூழல் தாகம்.  இனி வரும் நாடகளில் இவர்கள் பலவித சூழல் செயல்பாடுகளில் நம்முடன் இணைந்து செயல்படுவார்கள்.


இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும், ஜூ அவுட் ரீச் அலுவலகத்திற்கும், என் சிறப்பான நன்றிகள்.


அன்புடன்,
பிரவின் குமார்,
ஆய்வு மாணவர்,
நூறுல் இஸ்லாம் பல்கலைகழகம் 
குமாரகோயில் - தக்கலை 
கன்னியாகுமரி.
தொடர்புக்கு: +91  9600212487.

0 comments:

Post a Comment