Saturday, 21 November 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 53:G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். 

இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு மணி நேர வௌவால் வகுப்பை நடத்தினோம். வெளவால்களின் வகைகள், வாழிடம், உலகின் பெரிய, சிறிய வெளவால் என தொடர்ந்து, அவற்றின் சிறப்பியல்புகளை பற்றி சொன்னேன். 10 நிமிட இடைவெளிக்கு பிறகு வௌவால் நன்மைகள் குறித்தும் அவைகளுக்கும் மரங்களுக்கும் உள்ள தொடர்பை சொல்லி முடித்தேன். 


   நன்றி

   அன்புடன் 
   பிரவின்   

தொடரும் நம் சூழல் பயணங்கள் 52:


G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். 

கடந்த சூலை மாதத்தில் ஒரு "முழு" நாள் சுற்றுச் சூழல் நிகழ்ச்சியை பழனி மலை பாதுகாப்பு குழுவும், நானும் இணைந்து G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் (கொடைக்கானல் அடிவாரம்) ஏற்பாடு செய்திருந்தோம். இது வெறும் தகவல் சொல்லும் ஒரு வகுப்பாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய எளிய கற்றல் வழிகளை உபயோகித்தோம். மாணவர்கள் அனைவரும் எல்லா வித கற்றல் செயல் பாடுகளில் மிகவும் ஆர்வமாக பங்கேற்றனர். 

பாலூட்டிகள், மீன்கள் பற்றியே அதிகம் நிகழ்ச்சி வடிவமாகப்பட்டிருந்தது. காடுகள், நன்னீர் வாழ் உயிர்கள் குறித்தான விளக்க படங்கள், கானொலி, குழு விளையாட்டு என நிகழ்ச்சி சென்றது.          

1. மாணவர்கள் - குழு விளையாட்டு: எந்த குழு அதிக உயிரினங்களின் பெயர்களை கண்டுபிடிக்கும் என்று பார்க்க இது.2. குழு 2: பறவைகளை தேடிடும் குழந்தைகள். 3. குழு 3: மீன்களின் வழங்கு பெயர் என்ன ? என வினவும் மாணவர்கள் 
4. பழனி மலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் 5. உறுதிமொழி சொல்லும் நம் சிட்டுகள்.  


அனைவரின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது 

அன்புடன் 
பிரவின் குமார் 

Saturday, 4 July 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 51கடந்த சூன் மாதத்தின் முதல் வாரத்தில் "Ravisankaran Fellowship" என்ற ஒரு பிரசித்தி பெற்ற ஸ்காலர்ஷிப் நேர் முக தேர்விற்காக மும்பை சென்றிருந்தேன். நான் இதில் தேர்ச்சி பெற்று விட்டேன். மேலும் இதன் மூலமாக நான் "மங்கோலியா" நாட்டின் காடுகளில் சுமார் ஆறு மாதம் தங்கி இருந்து அங்குள்ள சிறிய பாலுட்டிகளை பற்றி ஆய்வு செய்யவும், அங்குள்ள விலங்கு அருங்காட்சியகத்தில் பயிலவும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதை நான் இங்கு தெரிவித்து கொள்கிறேன். 
அன்புடன் 
பிரவின் குமார் 
கன்னியாகுமரி 

தொடரும் நம் சூழல் பயணங்கள் 50

இரண்டாவது நிகழ்ச்சி "கோலபா" என்ற கடற்கரை சேரி குழந்தைகளுக்கு. மொத்தம் 12 குழந்தைகள் வந்திருந்தனர். இவர்கள் அனைவருமே மீன் பிடிக்கும் தொழிலில் உள்ள குழந்தைகள். 


இவர்களுக்காகவே மீன்கள், நண்டுகள், தட்டான்பூச்சிகள், நத்தைகள் மற்றும் பறவைகள் குறித்து அவர்களின் புரிதலை கேட்டுவிட்டு, சில தகவல்களை சொன்னேன். மேலும் பல விதமான புகைப்படங்களும், வீடியோக்களும் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக இருந்தது. 


நன்றிகளுடன். 
பிரவின். 

தொடரும் நம் சூழல் பயணங்கள் 49ஓவ்வொரு வருடமும் சூன் 5 "உலக சுற்றுச் சூழல் தினமாக" கொண்டாடப் படுகிறது. கடந்த சூன் 5 ம் தேதி, மும்பையின் இரண்டு  இடங்களில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினேன். முதல் நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக்காகவும், இரண்டாவது நிகழ்ச்சி  பள்ளி குழந்தைகளுக்காகவும் என ஏற்பாடு செய்திருந்தேன். 


முதலாம் நிகழ்வில் நன்னீர் உயிரினங்கள், அழிவில் உள்ள சில மேற்கு தொடர்ச்சி மழையின் தாவர, விலங்கு குழுக்களை பற்றி கலந்துரையாடினேன்.
ஆராய்ச்சிக்கான உக்திகள், வன விலங்கு ஆராய்ச்சி நிதி  திரட்டும் வழி  முறைகள் என பலவகைபட்ட விசயங்களை பகிர்ந்து கொண்டேன்.


அனைவரின் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது.       
     
அன்புடன் 
பிரவின் குமார் 
கன்னியாகுமரி 
  


தொடரும் நம் சூழல் பயணங்கள் 48கடந்த மார்ச் மாதத்தில் கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு டியூஷன் சென்ட்டரில் இரண்டு மணி நேர "காடுகளை அறிவோம்" என்ற தலைப்பில் ஒரு சிறிய நிகழ்ச்சியை நடத்தினேன். சுமார் 18 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். புரியும் வகையிலான எளிமையான அறிவியலுடன் இருந்த இந்த நிகழ்ச்சி அனைவரையும் கவனிக்க வைத்தது. 

கேள்விகள் பல கேட்டு, துள்ளலான மகிழ்ச்சியுடன் இந்த வகுப்பு நிறைவு பெற்றது.


அன்புடன் 
பிரவின் குமார் 
கன்னியாகுமரி. 

Tuesday, 28 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 47

புகைப்பட தொகுப்பு : 


1. சேலம் - சேர்வராயன் மலையின் காட்டு எலிகள் குறித்த களப்பணியின் போது..   


2. கேரளத்தின் புல்வெளி காட்டில் "தவளைகளை" தாக்கும் புஞ்சான் நோய் குறித்த களப்பணியின் போது ..  3. தட்டகாடு பறவைகள் சரணாலயத்தில் முனைவர். சுகதன் அவர்களுடன்..   

4. மங்களா தேவி கண்ணகி கோவில் செல்லும் வழியில் எடுத்தது ....


5. மங்களா தேவி கோவிலில் எனது குழுவுடன் ..6. மகாதேவ் கோவில் - கோவா. காட்டு தவளைகள் குறித்த களப்பணியின் சிறிய இடைவெளியில் எடுத்தது ...  7. கொடைக்கானலின் கூக்கால் சோலைக் காடுகள் செல்லும் வழியில் ..    


8. கிழக்குத் தொடர்ச்சி மலையின் "செஞ்சி" பகுதியில் களப் பணியின் போது ...  அன்புடன்
பிரவின் குமார்
கன்னியாகுமரி 

தொடரும் நம் சூழல் பயணங்கள் 46

கட்டுரை:

"முள்ளெலிகள் - அறிய வேண்டிய உயரினங்கள்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை "காடு இதழில்" பிரசுரமாகி உள்ளது.  நன்றி.

இப்படிக்கு,
பிரவீன் குமார்
ஆய்வு மாணவர்
நூருல் இஸ்லாம் பல்கலைகழகம்
கன்னியாகுமரி 

தொடரும் நம் சூழல் பயணங்கள் 45

வௌவால் குறித்த தொகுப்பு:

வௌவால்களைப் பற்றி நான் எழுதிய சிறிய தொகுப்பு "மின்மினி " என்ற குழந்தைகளுக்கான சிற்றிதழீல் வெளியாகியது.  


   
நன்றி.

இப்படிக்கு,

பிரவீன் குமார்
ஆய்வு மாணவர் 
நூருல் இஸ்லாம் பல்கலைகழகம்  
கன்னியாகுமரி 

தொடரும் நம் சூழல் பயணங்கள் 44

வெளவால்கள் பாதுகாப்பு நிகழ்ச்சி கொடைக்கானல்

கடந்த 2014 ல் ஒரு நாள் வெளவால்கள் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி ‘என் ஸ்கூல் சத்ய சுரபி” (My school sathya surabi) யில் நடைபெற்றது.  இதை பழனி மலை  பாதுகாப்புக் கழகமும், ஜூ அவுட்ரீச் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தது.  மொத்தம் 89 மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.  முதலில் ஒரு சில மாணவ – மாணவிகள் பெயர், வகுப்பைக் கேட்டறிந்தேன்.  பின்பு இந்தியாவும், காடுகளும் 5 வகை உயிர் குழுக்கள் , அரிய வகை விலங்குகள் பற்றி சொல்லிவிட்டு "காடுகள்" வீடியோவைக் காட்டினேன்.  பின்பு மலை அணில், வெளவால், கீரி, முள்ளெலி குறித்த “வகுப்பை" நடத்தினேன்.  தொடர்ந்து, வெளவால்கள் பற்றி சொல்வதற்கு முன்பு பாலூட்டி என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? சிறிய பெரிய பாலூட்டிகளுக்கு உதாரணம் ஏது? எனச் சொல்லச் சொன்னேன்.
பின்பு அனைவரையும் 5 குழுக்களாக பிரித்தேன். குழுவிற்கு தலைவர் ஒருவரை நிர்ணயித்தேன். வெளவால் தகவல் பெட்டகத்தை அனைவருக்கும் வழங்கினேன்.  தொடர்ந்து வெளவால்களின் வகைகள், இனம் கண்டறிய வேண்டிய பாகங்கள், உலகின் பெரிய, சிறிய வெளவால் என தொடர்ந்து, அவற்றின் சிறப்பியல்புகளை பற்றி சொல்லி முடித்தேன். 10 நிமிட இடைவெளி கொடுத்தேன். 
பின்பு குழுத் தலைவர் வகுப்பின் கரும்பலகை முன்னால் வந்து வெளவால் குறித்த தகவல்களை சொல்லிவிட்டு சென்றனர். தொடர்ந்து உலகின் மிக பெரிய இறக்கையுடைய "நிக்கோபார்" இராட்சத வெளவால் குறித்த வீடியோ ஒன்றை காட்டிய பின்பு அதே குழுக்கள் ‘குழு வாண்ம் தீட்டுதல் என்ற செயல்பாட்டை நடத்தினேன். 
நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள காட்டுயிர்களை எப்படி கண்டறிவது என்று சொன்னேன்.  மேலும் இவர்களுக்கு ZOO Outreach அமைப்பினர் வழங்கிய வாழ்த்து அட்டைகளை வழங்கினேன்.

1. மலை அணில் குழு
2. இருவாச்சி குழு

என இரண்டு மாணவர் குழுக்களை ஆரம்பித்தோம். இந்த குழுக்கள் வரும் நாட்களில் வனம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவர். அனைவரும் உறுதிமொழி செய்து கொண்டு விடைபெற்றோம்.


என் ஸ்கூல் சத்ய சுரபி பள்ளிக் குழந்தைகளின் ஆர்வமும், இயற்கை மேல் உள்ள அன்பும் மென் மேலும் வளர, பெருக வாழ்த்துக்கள். 
 
நன்றி.

இப்படிக்கு,
பிரவீன் குமார்
ஆய்வு மாணவர்
நூருல் இஸ்லாம் பல்கலைகழகம்
கன்னியாகுமரி.

தொடரும் நம் சூழல் பயணங்கள் 43பல்லுயிரியப் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

பல்லுயிரியப் பாதுகாப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை இராமநாதபுரம் மாவட்டத்தின் TDA  கலை, அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தேன்.  இது 13 பிப்ரவரி அன்று நடைபெற்றது.  

சுமார் 340 மாணவ – மாணவிகள் புhpந்து கொள்ளும் வண்ணம் பல்லுயிரியப் பாதுகாப்புக் கருத்து வழங்குவது தான் இந்த பட்டறையின் நோக்கம்.  ஆனால் அதையும் தாண்டி மாணவ – மாணவிகள் வன விலங்குகள், தாவரங்கள் காடுகள் குறித்த மேம்பட்ட அறிவை இந்த பட்டறை வாயிலாகக் கற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.  அதைத் தொடர்ந்து நான், இன்று நாம் என்னென்னக் கற்றுக் கொள்ளப் போகிறோம் என பட்டியலிட்டுவிட்டு, நம்மை சுற்றியுள்ள சில தாவர விலங்குகள் பற்றிச் சொன்னேன்.  பல்லுயிம் பற்றியும், ஏன் காப்பாற்றப்பட வேண்டும் எனவும் சொன்னேன்.
பின்பு இன்று சுற்றுசூழல், வன விளங்கு குறித்த  புத்தகக் கண்காட்சி, வகுப்பறை விவாதங்கள், குழு கலந்துரை யாடல், வீடியோக்கள் போன்றவற்றை மாணவர்கள் ஆர்வமுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்.முதலில் ராமநாதபுரத்தில் அதிகம் காணக்கூடிய தாவர, விலங்குகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  பின்பு அழிவில் காடுகள் என்ற வீடியோவைக் காட்டினேன்.  அழிந்த மற்றும் ஆபத்திலுள்ள சில உயிhpனங்களை பட்டியலிட்டேன்.  டோ டோ பறவையின் வீடியோ ஒன்றைக் காட்டினேன்.மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை பற்றியும் அங்குள்ள தாவரங்கள் , விலங்ககள் குறித்த பொதுவான தகவல்களைச் சொன்னேன்.  பின்பு நன்னீர் எப்படி உருவாகிறது.  நன்னீரை நம்பி வாழும் விலங்குகள் 300 மில்லியன் மக்கள், தாவரங்கள், விலங்குகள் குறித்து, சொன்னேன்.  பின்பு நன்னீர் எப்படி உருவாகிறது.  பின்பு நன்னீர் ஆதாரங்கள் நன்னீர் சொன்னேன்.விலங்குகளின் சூழல் நன்மைககளைச் சொன்னேன்.  (எகா) காட்டு மாடு, காட்டு கீரி, வெளவால், நத்தைகள், மீன்கள் அலுங்கு என பல தகவல்களைச் சொன்னேன். 

பின்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் தனித்துவமான இடங்கள், தனித்துவமான இனங்கள் குறித்து விளக்கினேன்.  பின்பு காடுகளும், விலங்ககளும்  அழிய சில காரணங்கள் . சில

1. காட்டுத் தீ
2. குப்பைகள்
3. கால நிலை மாற்றம்
4. காணாமல் போகும் விவசாய நிலங்கள் 
5. பொருளாதார வளர்ச்சி
6. முறையற்ற சுற்றுலா
7. வேட்டை

பின்பு நீர் வாழ்த் தாவரஙகளைப் பற்றி அட்டைகள் மூலமாக விளக்கினேன்.  முக்கியமாக வகைகள் மற்றும்  பயன்கள் பற்றி சொன்னேன்.  

சிறிய தேநீர் இடைவெளிக்கு பின்பு தாவர மருந்துகளை எப்படி தயாரிப்பது என்று 10 நிமிடம் சொன்னேன்.  பின்பு 2 வீடியோக்களைக் காட்டினேன்.  மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு ஆறு குழுக்களுக்கு ‘விநாடி-வினா’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தேன்.  மற்ற மாணவர்கள் வன விலங்கு குறித்த வீடியோக்களை பார்த்து ரசித்தனர்.நிகழ்ச்சி மாலையில் நிறைவு பெற்றது.  கல்லூரி முதல்வா கலந்து கொண்டார். சிறந்த சார்ட் (presentation) செய்தவர்களுக்கும் ‘விநாடி வினா’ போட்டியில் பங்கேற்ற , வெற்றிபெற்ற முதல் மூன்று குழுவினருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  இந்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடந்து முடிந்தது.

இப்படிக்கு,
ஆர்.பிரவின் குமார்
கன்னியாகுமரி