About

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday 11 June 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 25


காடுகளும் விலங்குகளும் குறித்த 
விழிப்புணர்வு நிகழ்ச்சி 
பேரிஜம் ஏரி - கொடைக்கானல் 

திருச்சி "பயிர்" பள்ளி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கொடைக்கானல் நிகழ்ச்சிக்கு கிளம்பினோம். நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவே கொடைக்கானலை அடைந்தோம். மறுநாள் விடியற்காலையின் பேருந்தில் சென்று செண்பகனூரை அடைந்தோம். இரண்டு பேருந்து முழுக்க பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் எங்களுக்காக காத்திருந்தனர். அவர்கள் பேருந்தில் திரு.பாரதிதாசன் அவர்களும், நானும் ஏறினோம். மாணவர்களின் ஆரவாரத்திலும், கூச்சலிலும் நான்கு மணிநேர பயணம் ஒரு நாள் போல எனக்கு இருந்தது. நாங்கள் கடைசியாக மதிய வேளையில் பேரிஜம் எரிக் கரையை அடைந்தோம். 

இவ்வளவு தூரம் குழந்தைகளை அழைத்து வந்து, இப்போது நான் அவர்களுக்கு வகுப்பெடுப்பது என்பது அவர்களை மேலும் களைப்படைய செய்யலாம் என எனக்குத் தோன்றியது.  இதனாலே வகுப்பை விளையாட்டுடன் துவக்கினேன். மாணவர்களை குழுக்களாகப் பிரித்து மலைப்பாம்பு, மான் என்ற விளையாட்டை விளையாடச் செய்தேன். பின்பு வனவிலங்கு அட்டைகளைக் காட்டி விலங்குகளைப் பற்றி சொன்னேன். அப்புறம் திரு. பாரதிதாசன் அவர்கள் குழந்தைகளுடன் பேசினார். அதில் குறிப்பாக காணாமல் போன நம் நாட்டு மரங்கள், புதிதாக புகுந்த அயல் நாட்டு வந்தேரி மரங்கள், பணப் பயிர்களால் காணாமல் போன சோலைக் காடுகள், என சொல்லிக் கொண்டிருந்தார். இடையில் ஒரு மாணவன் குறுக்கிட்டு "சார்..அட்டை கடிக்குது" எனச் சொல்லவும் திரு. பாரதிதாசன் அவர்கள் அட்டைகளைப் பற்றியும் சில சுவாரசியத் தகவல்களை சொன்னார்கள்.




பின்பு நான் அனைத்து மாணவர்களையும் பெரிய வட்டமாக அமர வைத்து நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளைப் பற்றி சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். பாலுட்டிகள் மற்றும் நன்னீர் உயிரினங்கள் அவற்றின் நன்மைகள், சூழலுக்கு செய்யும் தொண்டு பற்றியும் சொன்னேன். பின்பு அனைவரும் வன உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டி உறுதி மொழியை எடுத்துக் கொண்டோம்.   



னைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்து விட்டு மதிய உணவிற்குப் பிறகு பேருந்தில் கிளம்பினோம். 

வரும் போது இரண்டு மாணவர்கள் கிஷோர் மற்றும் நந்தன்  என்னிடம் நிறைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தனர். எனக்கு ஒரு கட்டத்திற்கு அப்புறம் ஆச்சர்யமாக இருந்தது …இவர்களால் எப்படி இப்படி கேள்விகளை கேட்டுக் கொண்டே, சிறிதும் இடைவெளி விடாமல் ..தொடர்வண்டி போல ..கேள்விகளை முடிகின்றது..  …  உண்மையில் இரண்டு, மூன்று கேள்விகளுக்குத்தான் எனக்கு பதில் தெரிந்தது.. இவர்கள் என் நண்பர்கள் ஆனார்கள்.. நான் பேருந்தை விட்டும் இறங்கும் வரை அவர்கள் கேள்விகளை கேட்டு முடிக்கவேயில்லை…ஆயிஷா புத்தகம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் ..இப்போது இவர்கள் மூலமாக..மீண்டும் ..

அவர்கள் தொடர்பு எண்களை எழுதிக் கொண்டு, எனது தொலைப்பேசி எண்களையும் கொடுத்தேன். திரு.பாரதிதாசன் அவர்களும், நானும் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இறங்கினேன். எல்லா ஆசிரியர்களின் உதவியுடன், இந்த நிகழ்ச்சி முடிந்தது.   

பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 
          




Tuesday 10 June 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 24


உயிரினங்கள் குறித்த இரண்டு நாள் கலந்துரையாடல் - திருச்சி 


கடந்த மே மாதம் 15 ம் தேதி அன்று திருச்சி பயிர் பள்ளியில் (www.payir.org) இரண்டு நாள் "உயிரினங்கள்" குறித்த பயிலரங்கை நடத்துவதற்காக கோவை அருளகம் திரு.பாரதிதாசன் அவர்களுடன் சென்றிருந்தேன். நிகழ்ச்சிக்கு தேவையானவற்றை தயார் செய்து கொண்டு இருவரும் அதிகாலையில் திருச்சியை அடைந்தோம். திருச்சியிலிருந்து தேனூருக்கு முதல் பேருந்தில் ஏறி தேனூர் சென்றடைந்தோம். இறங்கியவுடன் சாலையின் இரு புறமும் உள்ள பெரிய மரங்களை கண்டேன். அவற்றை தொட்டு பார்த்து பரவசமாகினேன்..மெதுவாக நடக்க ஆரம்பிதோம். ஒரு நிமிட நடைக்கு அப்புறம் தேனூர் பள்ளியை அடைந்தோம். ஒடுகளால் வேயப்பட்ட அந்த பள்ளியும், மருத்துவமனையும் பல மக்களின் தேவையை தினமும் பூர்த்தி செய்து கொண்டிருப்பதாக திரு.பாரதிதாசன் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அதிகமான மரங்களும், அமைதியான காற்றும் ரம்மியமாக இருந்தது..என்னை மிகவும் கவர்ந்தது

இந்த இடத்தில் நமது குழந்தைகளுக்கு வனம் மற்றும் காடுகள் குறித்து பட்டறையை நடத்தப்  போகிறேன் என்று நினைக்கும்போதே என்னக்குள் சந்தோசம் பீறிட்டு பொங்கியது

ஒரு சிறிய ஓய்வுக்கு பிறகு எழுந்தேன்வெளியில் பல குழந்தைகள் மகிழ்ச்சியாக ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்தனர்….நானும் சிறிது நேரம் ஊஞ்சலில் விளையாடிவிட்டு வந்தேன்இன்றைய வகுப்பிற்கு தேவையானவற்றை தயார் செய்து கொண்டு வகுப்பிற்குள் சென்றேன்வனம் மற்றும் காடுகள் குறித்த தகவல்கள் அடங்கிய காகிதங்களை ஓட்டினேன்திரு.பாரதிதாசன் அவர்கள் நிகழ்ச்சியை சிறிய அறிமுகத்துடன் தொடங்கி வைத்தார்கள்இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளகள் அனைவரும் கிராமப் புற பள்ளிக் குழந்தைகள் ஆகும்அவர்களிடம் இன்றும்நாளையும் நாம் என்ன என்ன கற்றுக்கொள்ளப் போகிறோம் அதை எப்படி கற்றுகொள்ளப் போகிறோம் எனச் சொன்னேன்அனைவரின் பெயர்வகுப்பு மற்றும் ஊர் போன்றவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டேன்வனவிலங்குகளைப் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை சொல்லிவிட்டு வகுப்பிற்கு வெளியில் “attitude assessment” என்ற ஒரு நிகழ்வை நடத்தி மாணவர்களின் வனவிலங்கு பற்றிய அடிப்படைப் புரிதலை தெரிந்து கொண்டேன்







பின்பு இயற்கை அன்னை குறித்த ஒரு வீடியோவைக் காட்டிவிட்டு    மரபு சாரா எரிசக்தி பற்றிய ஒரு சிறிய, சிந்திக்க வைக்கும், வீடியோவை காட்டினேன்



பின்பு அனைவரையும் ஐந்து குழுக்களாகப் பிரித்து  குழுவிற்கு ஒரு அட்டையை கொடுத்தேன். பத்து நிமிடம் நேரம் கொடுத்து தலைப்பிற்கு பொருத்தமான தங்களுக்கு தெரிந்த செய்திகளை தயார் செய்ய சொன்னேன். பத்து நிமிடத்திற்க்கு அப்புறம் குழுத் தலைவர் தகவல்களை அனைவரின் முன்பும் சொல்லி கை தட்டல்களை பெற்றார். பின்பு சோலைக் காடுகளை காப்போம் என்ற வீடியோ வை காட்டினேன். அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.     




அனைவரையும் மரத்தடியில் அமர்த்தி குழுக்களாகப் பிரித்து கதைகளைக் கேட்டோம். அவர்கள் விலங்குகள் பற்றி பல கதைகளை சொன்னார்கள். நானும் தேன் சிட்டு பற்றிய ஒரு கதையை சொல்லி விட்டு மதிய உணவு இடைவெளிக்கு சென்றோம். உணவுவிற்கு பிறகு ஆசிரியர். பாலா பாட்டு சொல்லிகொடுத்தார். குப்பை என்ற ஒரு வீடியோவைக் காட்டினேன். பின்பு அனைவரையும் நான்கு குழுக்களாகப் பிரித்து puzzle விளையாட்டை விளையாடினேன். பின்பு ஒவ்வொரு குழுவிற்கும் விலங்குகளின் வகைகளையும், முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொன்னேன்







பின்பு ஒரு குடம் தண்ணி ஊத்தி என்ற வீடியோ வை காட்டி விட்டு வௌவால் பற்றிய வகுப்பை துவக்கினேன். வௌவால் இனங்கள் பற்றிய பலவித சுவாரசிய தகவல்களை சொன்னேன். பல மாணவர்கள் நான் சொன்னவற்றை மீண்டும் அனைவர் முன்னும் சொல்லி கைதட்டல்களைப் பெற்றனர். வௌவால் பற்றியவண்ணம் செய்யும் செயல்பாட்டைஅடுத்து பிணம்தின்னி கழுகுகள் பற்றி திரு.பாரதிதாசன் அவர்கள்  சொன்னார்கள். ஒரு குழுப் புகைப்படத்துடன் இந்த மாலையில் முதல் நாள் வகுப்பை முடித்துக் கொண்டோம்





இரண்டாவது நாள் காலையில் சீக்கிரமாகவே மாணவர்கள் வரத் தொடங்கினர். இன்றைய நாள் வகுப்பு மைதானத்தில் விளையாட்டுடன் தொடங்கினேன். முதலில் pass the stick விளையாட்டும், பின்பு கர்சீப் எடுத்தல் விளையாட்டையும் சொல்லிக் கொடுத்து விட்டு, இரண்டு முறை விளையாடி முடித்துவிட்டு வகுப்பிற்குள் அழைத்து சென்றேன். 







அனைவரையும் மூன்று குழுக்களாக பிரித்து காட்டின் வகைகளை சொல்லிவிட்டு “puzzle” விளையாட்டுடன்  காட்டில் உள்ள பறவை மற்றும் விலங்குகள் பற்றி சொன்னேன்.  





பின்பு அனைவரையும் நான்கு குழுக்களாகப் பிரித்து, ஓவ்வொரு குழுவிற்கும் வனவிலங்குகள் உள்ள ஒரு பெரிய அட்டையை கொடுத்தேன். அனைவரும் தங்களுக்கு தெரிந்த, பார்த்த விலங்குகளை பட்டியலிடச் சொன்னேன். அனைத்து குழுக்களும் எழுதி முடித்துவிட்டு எழுதிய பெயர்களை அனவர்க்கும் முன் சொன்னார்கள். நானும், திரு.பாரதிதாசனும் கவனமாக அவர்கள் தவறை சரி செய்தோம்





இந்த விலங்குகளை கண்டறி என்ற நிகழ்விற்கு அப்புறம் தமிழ் வீடியோ ஒன்றை காண்பித்தேன். அது இப்படி ஆரம்பித்தது

நான் பூமி அழுகின்றேன் ..உனக்கு தெரியுதா மனிதா...
நான் நாளும் அழிகின்றேன் ..உனக்கு புரியுதா மனிதா ..
ஆசை மனிதனே சொல் ..ஓசை மனிதனே சொல் .
நான் பிறக்கையிலே நீ இருக்கலியே..
நீ இருக்கையிலே நான் சிறக்கலியே….
ஆசை மனிதனே சொல் ..ஓசை மனிதனே சொல் ……..
………..    ………   
…………   ……….


பின்பு திரு.பாரதிதாசன் அவர்கள் நமது காடுகள் குறித்தும், பாருகள் (கழுகுகள்) குறித்தும் பேசினார்கள். கேள்வி பதில் நிகழ்வாகவும், சிறு கதைகளை கேட்கும் நேரமாகவும், பறவை பார்த்தல் பற்றிய புரிதல்களை விளக்கும் வண்ணமாக பேசினார்கள். ஆர்வமும், ஆர்ப்பரிப்பும் உள்ள குழந்தைகளிடத்தில் வன விலங்கு மற்றும் காடுகள் பாதுகாப்பு குறித்த ஒரு பெரிய, தொடர் உறுதி மொழியுடன் நிகழ்ச்சியை முடிக்கும் தருவாய்க்கு வந்தோம். சுற்றுச் சூழல் துணுக்குகளை சத்தமாக வாசிக்கச் சொன்னேன். பலரும் ஆர்வமாக வந்து வாசித்துவிட்டு சென்றனர்









பயிர் அறக்கட்டளையின் திரு.செந்தில் மற்றும் திருமதி.ப்ரீத்தி அவர்களின் நன்றியுரையுடன் இந்த வகுப்பு முடிந்தது. இரண்டு மாணவர்கள் தங்கள் இரண்டு நாள் அனுபவங்களை சொன்னார்கள்அனைவரையும் பெரிய கைதட்டல் மூலமாக சந்தோசப்படுத்திவிட்டு வனவிலங்கு வாழ்த்து அட்டைகளை வழங்கினேன்





சில பகிர்வுகள்

தவமணி மற்றும் உதய குமார் என்ற இரண்டு தன்னார்வ தொண்டு நண்பர்களும் பகிர்ந்தது

1. வகுப்பு சிறப்பாக இருந்தது 
2. விளையாட்டு மிக சுறுசுறுப்பாக இருந்தது 
3. அனைத்து மாணவர்களும் ஆர்வமாக ஈடுபடும் விதமாக இந்த நிகழ்ச்சி இருந்தது 
4. குழந்தைகளை யோசிக்க வைக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி இருந்தது 
5. வௌவால் - குழு கலந்துரையாடல் மிகச் சுலபமாக புரிந்து கொண்டனர் 

நன்றிகள்:

என்னை பயிற்சிப் பட்டறையை நடத்த அழைத்த திரு. பாரதிதாசன் (அருளகம்) அவர்களுக்கு நன்றிகள். தேனூர் கிராமத்தை ஒரு முன்னுதாரன கிராமமாக மாற்றி விட்ட திரு.செந்தில் மற்றும் திருமதி.ப்ரீத்தி அவர்களுக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய என் ஆசிரியர், முனைவர்சஞ்சய் மொலூர், முனைவர்.தானியல் மற்றும் திரு.மாரிமுத்து அவர்களுக்கும் நன்றிகள்.       பயிர் பள்ளியின் ஆசிரியர்கள், தவமணி மற்றும் உதயகுமார் அவர்களுக்கும் என் நன்றிகள். எங்களுக்காக பாரம்பரிய உணவுகளை செய்து வழங்கிய பயிர் கிராம பெண்களுக்கும், பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்த ஆசிரியை அவர்களுக்கும் என் நன்றிகள். நிகழ்ச்சிக்காக வண்ண அட்டைகள், படங்கள், புத்தகங்கள் என அனைத்தையும் வழங்கி உற்சாகப்படுத்திய என் Zoo Outreach அலுவலகத்திற்கும் என் நன்றிகள். இன்னும் புதிதாக பல நிகழ்சிகளை செய்ய இது உத்வேகமாக உள்ளது

இந்த இரண்டு நாட்கள் சென்றதே தெரியவில்லை. விளையாட்டு, காடுகள் & விலங்குகள் பற்றிய வீடியோ, ஓவியம், குழந்தைகளின்  கதைகள், படங்கள் என மகிழ்ச்சியின் துள்ளலில் இருந்த குழந்தைகளுடன் நானும் குழந்தையாகவே மாறிப் போனேன்..

இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு மிகவும் ஈடுபாடாகவும், சற்று புதிதாகவும்,  இயற்கை பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன். பள்ளி ஆசிரியர்களிடம் இந்த மாணவர்களின் சூழல் செயல்பாட்டை அடுத்த ஆறு மாதங்களுக்கு கூர்ந்து கவனிக்குமாறு சொல்லிவிட்டு வந்தேன்.  

ஒரு புதிய ஆரம்பம் ..ஒரு புதிய வெளியை நோக்கி ..
காத்திருப்போம் ..விடியலை எதிர்பார்த்து ….

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர்         



எனது இரண்டு கட்டுரைகள்

சமீபத்தில் வெளியான எனது இரண்டு கட்டுரைகளை இங்கே  காணலாம்.    


1. அழிவின் விளிம்பில் நன்னீர் தாவரங்கள்





2. எதையும் கொறிக்கும் எலிகள் 



இந்த உலகம் நமக்காக மட்டும் படைக்கப்பட்டதல்ல …
அனைத்து உயிர்களுகக்காகவும்தான்..  - தலாய் லாமா.