About

Tuesday 28 October 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 32


 வன விலங்கு வார விழா நிகழ்வு 1 - சுஸ்லான் காற்றாலை, தேவர்குளம், திருநெல்வேலி  



ஓவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரம் அதாவது 2 முதல் 8 வரை இந்திய வன விலங்கு வார விழாவாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இந்த மாதத்தில் 04 ம் தேதி அன்று, வன விலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை பகுதியில் உள்ள Suzlon காற்றலை நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினேன்.

காலை 11 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது, இதில் இந்திய வன விலங்கு வார விழா ஏன் கொண்டாட வேண்டும், என சொல்லி இந்திய பாலூட்டிகள், தெற்காசிய தவளை வகைகள், தெற்காசிய குரங்கு வகைகள், அழிவில் அலுங்கு எனப் பலவகைப்பட்ட அட்டைகளையும், பதாகைகளையும் காட்சிக்கு வைத்திருந்தேன். மேலும் பல்வேறு பாலூட்டிகளின் படங்களையும் பார்வைக்கு வைத்திருந்தேன்.          


ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த நிகழ்வு "மயில்" பற்றியதாக இருந்தாலும் நான் அதிகமாக பாலூட்டிகளைப் பற்றி செய்திகளை சொன்னேன். காடுகள் அழிவு குறித்த ஒரு சிறிய வீடியோவை காட்டினேன். மேலும் இந்த ஊத்துமலைப் பகுதியில் வாழும் உடும்பு, வௌவால். கீரி, முள் எலிகள் பற்றிய பல சுவாரசிய உண்மைகளை சொன்னேன். அலுங்கு எனப்படும் எறும்பு திண்ணியின் 10 உண்மைகளை சொன்னேன். படங்கள் மூலமாக இந்த செய்தி அவர்களை எளிதில் சென்றடைந்தது.    



உலக அழிவில் அழிந்து போன "டோ டோ" பறவைப் பற்றியும், இந்திய அளவில் அழிந்து போன சீட்டா எனப்படும் சிவிங்கிப் புலி பற்றி சொன்னேன். மேலும் நமது மலைகளில் அழிவின் விளிம்பில், ஆபத்தில் உள்ள சாம்பல் நிற மலை அணில், சோலை மந்தி, வரையாடு பற்றி கூறினேன். அப்படியே 'சோலைக் காடுகளை காபோம்" என்ற என்ற வீடியோவையும், வெளிச்சம் வெளியீட்டின் "மயிலு" என்ற  வீடியோவையும் காட்டினேன்.         
       
இந்த நிகழ்ச்சியின் பங்கேற்ப்பாளர்கள் அனைவரும் பொறியாளர்கள் என்பதால் பலரும் பல மாதிரியான கேள்விகளைக் கேட்டனர். அவர்கள் பகுதியில் உள்ள மயில்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ளதாகவும் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை தேவை எனவும் வலியுறித்தினர்.  

மயில்கள் இந்த வளாகத்திற்குள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டனர். மயிலை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த கேள்வி இருந்ததால், அங்குள்ள ஒருவரே பதில் சொன்னார். அப்படியே சூழல் குறித்த சில வாக்கியங்களைச் சொல்லிவிட்டு  நிகழ்ச்சியை முடித்துக் கொண்டேன்.  


நன்றி:
இந்த நிகழ்விற்காக என்னை அழைத்த நண்பர்.வெங்கடேஷ் பாபு, நிகழ்ச்சியை நடத்த ஒத்துழைப்பு நல்கிய நண்பர் ஜெகன் மற்றும் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் என் நன்றிகள்.


அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர்  
அலைப்பேசி
9600212487


0 comments:

Post a Comment