About

Sunday 21 September 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 31


பேரூர் பள்ளி குழந்தைகளுடன் பல்லுயிரியம் நிகழ்ச்சி


கடந்த மாதத்தில் ஒரு நாள் கோயம்புத்தூரில் உள்ள பேரூர் அரசு பள்ளியில், பல்லுயிரியம் குறித்த இரண்டு மணி நேர விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சியை "சிக்ஸ்த் சென்ஸ் பவுண்டேசன்" ஏற்பாடு செய்திருந்தது. 



முதலில் என்னை அறிமுகம் செய்து கொண்டு, மலைப் பகுதிக்கு அருகில் வசிக்கும் குழந்தைகளை எழுந்திரிக்க சொன்னேன். மூன்று மாணவர்கள் அவர்கள் அருகில் உள்ள மலையை பற்றியும் அங்குள்ள, அவர்கள் பார்த்த விலங்குகள் பற்றியும் சொன்னார்கள். காட்டு விலங்குகள் பற்றி சொன்னேன். அவர்களை சுற்றி, வீடுகளில் தென்படும் உயிரினங்கள் பற்றி சொல்லிவிட்டு, நம்மை விட்டு பிரிந்து சென்ற அல்லது நாம் அழித்த "டோ டோ" பறவை பற்றியும், சிவிங்கி புலி பற்றியும் சொன்னேன். ஒரு சிறிய வீடியோவை காட்டிவிட்டு, உணவு சங்கிலி பற்றியும், காட்டு அணில்கள் பற்றியும், பிணம்திண்ணி கழுகுகள் பற்றியும் சொன்னேன்.   



நன்னீர் பற்றியும், மாசுபாடுகள் பற்றியும் சொன்னேன். அப்படியே மாணவர்களுடன் மரங்கள் குறித்து சொல்லிவிட்டு "உசந்த மரத்தாலே ஐலசா" என்ற பாடலை சொல்லிக் காட்டிவிட்டு, அனைவரையும் ஒன்றாக வைத்து "உறுதி மொழியை" ஆரம்பித்து, முடித்து வைத்தேன். மாணவர்கள் பலரும் ஆர்வமாக என்னுடன் சேர்ந்து பலத்த சப்தத்தில் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். வகுப்பிற்கு வெளியில் நான் காட்ச்சிக்கு வைத்திருந்த வன விலங்கு பாதுகாப்பு அட்டைகளையும், படங்களையும் மாணவர்கள் பார்த்து பயன் பெற்றனர். 



இந்த நிகழ்ச்சிக்காக என்னை அழைத்த தோழர்.கிருஷ்ணா அவர்களுக்கும், அவர் குழுவினருக்கும் என் நன்றிகள். தோழர்.கிருஷ்ணா சிக்ஸ்த் சென்ஸ் பவுண்டேசன் என்ற அமைப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு மூலமாக பல மாணவர்களின் மேல் படிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அரசுப் பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தியது என்னக்குள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மேலும் மாணவர்களின் அசாத்திய புரிந்து கொள்ளும் திறனையும், ஆர்வத்தையும் கண்டுகொண்டேன்.                    



மண்மணம் வீசும் பேரூர் வீதியில், இந்த சூழல் மாணவர் படை,  நம் சுற்றுச் சூழலை காக்கும் பணியில் ஈடுபடுவர்.  


அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 

0 comments:

Post a Comment