About

Wednesday 11 June 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 25


காடுகளும் விலங்குகளும் குறித்த 
விழிப்புணர்வு நிகழ்ச்சி 
பேரிஜம் ஏரி - கொடைக்கானல் 

திருச்சி "பயிர்" பள்ளி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கொடைக்கானல் நிகழ்ச்சிக்கு கிளம்பினோம். நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவே கொடைக்கானலை அடைந்தோம். மறுநாள் விடியற்காலையின் பேருந்தில் சென்று செண்பகனூரை அடைந்தோம். இரண்டு பேருந்து முழுக்க பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் எங்களுக்காக காத்திருந்தனர். அவர்கள் பேருந்தில் திரு.பாரதிதாசன் அவர்களும், நானும் ஏறினோம். மாணவர்களின் ஆரவாரத்திலும், கூச்சலிலும் நான்கு மணிநேர பயணம் ஒரு நாள் போல எனக்கு இருந்தது. நாங்கள் கடைசியாக மதிய வேளையில் பேரிஜம் எரிக் கரையை அடைந்தோம். 

இவ்வளவு தூரம் குழந்தைகளை அழைத்து வந்து, இப்போது நான் அவர்களுக்கு வகுப்பெடுப்பது என்பது அவர்களை மேலும் களைப்படைய செய்யலாம் என எனக்குத் தோன்றியது.  இதனாலே வகுப்பை விளையாட்டுடன் துவக்கினேன். மாணவர்களை குழுக்களாகப் பிரித்து மலைப்பாம்பு, மான் என்ற விளையாட்டை விளையாடச் செய்தேன். பின்பு வனவிலங்கு அட்டைகளைக் காட்டி விலங்குகளைப் பற்றி சொன்னேன். அப்புறம் திரு. பாரதிதாசன் அவர்கள் குழந்தைகளுடன் பேசினார். அதில் குறிப்பாக காணாமல் போன நம் நாட்டு மரங்கள், புதிதாக புகுந்த அயல் நாட்டு வந்தேரி மரங்கள், பணப் பயிர்களால் காணாமல் போன சோலைக் காடுகள், என சொல்லிக் கொண்டிருந்தார். இடையில் ஒரு மாணவன் குறுக்கிட்டு "சார்..அட்டை கடிக்குது" எனச் சொல்லவும் திரு. பாரதிதாசன் அவர்கள் அட்டைகளைப் பற்றியும் சில சுவாரசியத் தகவல்களை சொன்னார்கள்.




பின்பு நான் அனைத்து மாணவர்களையும் பெரிய வட்டமாக அமர வைத்து நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளைப் பற்றி சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். பாலுட்டிகள் மற்றும் நன்னீர் உயிரினங்கள் அவற்றின் நன்மைகள், சூழலுக்கு செய்யும் தொண்டு பற்றியும் சொன்னேன். பின்பு அனைவரும் வன உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டி உறுதி மொழியை எடுத்துக் கொண்டோம்.   



னைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்து விட்டு மதிய உணவிற்குப் பிறகு பேருந்தில் கிளம்பினோம். 

வரும் போது இரண்டு மாணவர்கள் கிஷோர் மற்றும் நந்தன்  என்னிடம் நிறைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தனர். எனக்கு ஒரு கட்டத்திற்கு அப்புறம் ஆச்சர்யமாக இருந்தது …இவர்களால் எப்படி இப்படி கேள்விகளை கேட்டுக் கொண்டே, சிறிதும் இடைவெளி விடாமல் ..தொடர்வண்டி போல ..கேள்விகளை முடிகின்றது..  …  உண்மையில் இரண்டு, மூன்று கேள்விகளுக்குத்தான் எனக்கு பதில் தெரிந்தது.. இவர்கள் என் நண்பர்கள் ஆனார்கள்.. நான் பேருந்தை விட்டும் இறங்கும் வரை அவர்கள் கேள்விகளை கேட்டு முடிக்கவேயில்லை…ஆயிஷா புத்தகம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் ..இப்போது இவர்கள் மூலமாக..மீண்டும் ..

அவர்கள் தொடர்பு எண்களை எழுதிக் கொண்டு, எனது தொலைப்பேசி எண்களையும் கொடுத்தேன். திரு.பாரதிதாசன் அவர்களும், நானும் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இறங்கினேன். எல்லா ஆசிரியர்களின் உதவியுடன், இந்த நிகழ்ச்சி முடிந்தது.   

பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 
          




0 comments:

Post a Comment