About

Monday 26 May 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 23



சிறிய பாலுட்டிகள் பாதுகாப்பு
 விழிப்புணர்வு நிகழ்ச்சி: கடையம்

கடந்த ஏப்ரல் 30 அன்று "நான் காணும் சிறிய பாலுட்டிகள்" என்ற ஒரு நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் வட்டத்தில் உள்ள கட்டேறிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடத்தினேன். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் ஆசிரியர்கள், இரண்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். 






நான் பங்கேற்பாளர்களின் அறிமுகத்திற்கு பிறகு அவர்கள் தினமும் பார்க்கும் விலங்குகள் என்ன என்ன என்று கேட்டுவிட்டு, அவர்கள் பார்க்க விரும்பும் விலங்குகள் பற்றியும் கேட்டுவிட்டுஇயற்கை என்ற ஒரு வீடியோவை காண்பித்தேன். பின்பு காட்டு விலங்குகளையும், அவற்றின் நன்மைகளையும் சொன்னேன். பின்பு அனைவருக்கும் மொத்தமாக சேர்த்து 10 சுற்றுச்சூழல் கேள்விகளை கேட்டேன். இந்த கேள்விக்கு பதில் ஆம் என்றால் கைகளை தூக்க வேண்டும், இல்லை என்றால் சும்மா நிற்க வேண்டும் ..பலவித கேள்விகளுக்கும் பலவித பதில்களுடன் இந்த மாணவர்கள் தங்கள் சூழல் அக்கறையை அப்படியே வெளிப்படுத்தினர்




அவர்களை சுற்றி உள்ள காட்டு பகுதியில் உள்ள பலவித முயல்கள், அடிக்கடி பார்க்கும் வௌவால், வயல் பக்கம் திரியும் எலிகள், மரங்களில் சாடும் அணில்கள் பற்றி சுவாரசியமாக கேட்டு தெரிந்து கொண்டேன். 

பின்பு முள் எலிகள் பற்றியும் சொன்னேன். பின்பு பங்கேற்பாளர்கள் அனைவரும் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சிறிய பாலுட்டிகளின் எண்ணிக்கை, முக்கியத்துவம், படங்கள் மற்றும் சிறப்பியல்புகள் போன்றவற்றை சொன்னேன்




ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஒரு குழு தலைவர் முன்னால் வந்து அவர்கள் இன்று தெரிந்து கொண்ட தகவல்களை திரும்ப சொல்லி கைதட்டல்களை பெற்றனர். பின்பு சிறிய பாலுட்டிகளை பாதுகாக்கும் விதமாக ஒரு உறுதி மொழியை அனைவரும் சேர்ந்து எடுத்து கொண்டோம். இரண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை பற்றி தங்கள் கருத்துக்களைச் சொன்னர்கள். பின்பு குழு புகைப்படத்துடன் அவர்கள் இனி செய்ய வேண்டிய செயல்கள் பற்றி சொல்லிவிட்டு வந்தேன்.  






இந்த நிகழ்சிக்காக உதவிய மதிவாணன் ATREE, நண்பர்.வெற்றி மற்றும் பள்ளியில் வகுப்பை நடத்த அனுமதி வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றிகள். மிக சிறிய குழுவிற்கு எப்படி மிக சிறப்பான வன விலங்கு பாதுகாப்பு செய்திகளை எளிமையாக வழங்க முடியும் என்பதை எனக்கு பல முறை சொன்ன முனைவர்.தானியல் மற்றும் திரு.மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள். மேலும் இந்த நிகழ்சிக்காக விளம்பர திரைச் சீலை (banner) செய்து வழங்கிய என் அலுவலக நண்பர் பிரவின் அவர்களுக்கும் என் நன்றிகள். இந்த நிகழ்வை தினமணி, தினமலர் மற்றும் தி இந்து செய்தித்தாள்களில் பிரசுரிக்க உதவிய  ஊடக நண்பர்களுக்கும் என் நன்றிகள்.      



ஓவ்வொரு சிறிய விலங்குகளும் இந்த சூழலுக்கும், காடுகளுக்கும் மிகப் பெரிய உதவி செய்து வருகின்றது. அதிகம் கவனிக்கப்படாத விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருந்தது.    

பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 

0 comments:

Post a Comment