About

Monday 26 May 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 22


கல்லூரி மாணவர்களிடம் ஒரு கலந்துரையாடல் - ஆழ்வார்க்குறிச்சி

திருநெல்வேலி, நாணல்குளம் வௌவால் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதிய வேளையில் ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரிக்கு வந்தேன். கல்லூரி முதல்வர் முனைவர். ரஞ்சித் சிங் அவர்களை சந்தித்து விட்டு இளங்கலை உயிர் தொழில் நுட்பவியல் துறைக்கு சென்றேன். செல்லும் வழியில் நுண்ணுயிரியல் துறையில் என் ஆசிரியர் முனைவர். விஸ்வநாதன் அவர்களையும், விலங்கியல் துறையில் முனைவர்.சுதாகர் அவர்களையும் சந்தித்தேன். முனைவர்.சுதாகர் அவர்கள் கடந்த பல வருடமாக வௌவால்கள் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

அப்படியே நான் பயின்ற உயிர் தொழில் நுட்பவியல் துறைக்கு வந்தேன். என் நண்பன் பாலாவை சந்தித்து விட்டு, துறைத்தலைவர் முனைவர். இராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து விட்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி மூன்று ஆண்டு மாணவர்களுக்கும் உயிரி தொழில் நுட்பவியல் பற்றியும், வேலைவாய்ப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்தும் சில தகவல்களை வழங்குவதற்காக சென்றேன். மிக முக்கியமாக எப்படி ஆராய்ச்சிகள் நமது பகுதியில் உள்ள சமுகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று சில உதாரணங்களுடன் சொன்னேன். 

பின்பு அவர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி அறிவியலை எளிமையாக, ஆர்வமாக கற்க வேண்டும் என சொன்னேன். இந்த கலந்துரையாடலில் எனக்கு தெரிந்த சில தகவல் மூட்டைகளை அவர்களிடத்தில் சொல்ல செல்லவில்லை. அவர்களிடத்திலே புதைந்து உள்ள கேள்வி கேட்கும் திறனையும், அடிப்படை அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக இந்த கலந்துரையாடல் இருந்தது.   

மிக முக்கியமாக சென்னை ஐ.ஐ.டி, சென்னை பல்கலைக்கழகம். பெங்களுரு NCBS, பயோக்கான் போன்ற பெரிய கல்வி மற்றும் ஆய்வு நிலையங்களில் உள்ள பல மாணவர்கள் இந்த கிராமப் பகுதியை சார்ந்தவர்கள். பலரும் அடிப்படை கல்வியை இங்கு படித்தவர்கள் ஆவர்.                     

அறிவியல் ஆர்வம், ஆங்கில சரளம் இரண்டும் மிக அவசியம் எனவும் சொன்னேன். ஆராய்ச்சிப் படிப்புகள் (உணவு, தோல், மருத்துவத்துறை, நுண்ணுயிரி, மரபு பொருளியல் மற்றும் பல) பற்றியும் சில செய்திகளை சொன்னேன். 



இந்த சிறிய கலந்துரையாடலுக்காக என்னை அழைத்த முனைவர். இராம கிருஷ்ணன் அவர்களுக்கும், என் நண்பன் பாலாவிற்கும் என் நன்றிகள். நான் இந்த கல்லூரியின், இந்த துறையின் பழைய மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். 

படிப்போம் இன்னும் ஆர்வமாக …

பிரவின் குமார்   
கோயம்புத்தூர் 
             

0 comments:

Post a Comment