About

Monday 3 March 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 14
விந்தை உலகம்: 
காட்டு எலிகளும் (Wild rodents)  முள்ளெலிகளும் (Hedgehogs) 

கடந்த 9/2/2014 அன்று மாலை, ஒலிப்பதிவிற்க்காக நான் திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்திற்கு சென்றிருந்தேன். வார வாரம் புதன் கிழமைகளில் காலையில் ஒலிபரப்பாகும் விந்தை உலகம் நிகழ்ச்சியில் எனது கருத்துகளை சொல்வதற்காக சென்றிருந்தேன். காட்டு எலிகளை பற்றியும், முள்ளெலிகளை பற்றியும் தான். இந்த நிகழ்ச்சியில் அழிவில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் பல சிறிய பாலுட்டிகளில் ஒன்றான காட்டு எலிகளை பற்றியும், இந்த காட்டு எலிகளின் முக்கியதுவத்தை பற்றியும், நமது நாட்டில் உள்ள மூன்று வகையான முள்ளெலிகளை பற்றியும் மிகக்குறிப்பாக நமது பகுதியில் மட்டுமே காணக்கூடிய தென் இந்திய முள்ளெலிகள் பற்றியும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டேன். இதில் பல தகவல்கள் மிகவும் அரியது மற்றும் கேட்கும் வாசகர்களுக்கு புதிது. இந்த நிகழ்ச்சிக்காக என்னை அழைத்த உயர்திரு. திருமலை நம்பி அவர்களுக்கு என் நன்றிகள். மிக விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என நினைக்கிறன்.  




ஏன் எலிகளை பற்றி


2011 முதல் 2020 வரை இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் பலவகையான தாவர விலங்குகள் மிக விரைவில் பூண்டோடு அற்று போகலாம் (Extinction) என பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருகின்றது. அதனால், மிக வேகமாக அழிவை நோக்கி உள்ள அதிகம் ஆராய்ச்சி செய்யபடாத மிக சிறிய  இந்தியப் பாலுட்டிகளை பற்றி பாமர மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக இந்த நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தேன்.



நன்றிகளுடன் 
பிரவின் குமார் 

0 comments:

Post a Comment