About

Thursday 6 March 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 15 & 16

கடந்த 23.2.2014 அன்று நிகழ்ந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருந்தது. முதல் நிகழ்ச்சி ஆய்குடி சிவ சரஸ்வதி வித்யாலாவிலும், இரண்டவது நிகழ்ச்சி  ஆய்குடி அமர் சேவா சங்கத்திலும் நடந்தது. 
முதல் நிகழ்ச்சி: தென்காசி ஆய்குடி சிவ சரஸ்வதி வித்யாலா பள்ளிக்கூடம்
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 42 மாணவ-மாணவியர் மிகவும் ஈடுபாடாகவும், ஆர்வமாகவும் கலந்துகொண்டனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. இதில் நான், இந்தியாவில் உள்ள பலவகை வன உயிரினங்களை விளக்கும் வண்ணம் பலவகையான active learning tools ஐ பயன்படுத்தி நமது பலவகை விலங்குகளைப் பற்றி விளக்கினேன், பின்பு மழைக்காடுகள் பற்றிய வீடியோ மூலமாகவும், வண்ண அட்டைகள் மூலமாகவும் நமது சுற்றுச்சூழலின் முக்கியதுவத்தை சொன்னேன். 





மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக குழு கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. இதில் பலரும் பல புதிய தகவல்களை வழங்கி கைதட்டல்களைப் பெற்றனர். மேலும் அவர்களுக்குள்ளே புதைந்துள்ள படைப்பு திறன் மற்றும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்ததை இந்த மூன்று மணி நேரத்தில் கண் கூடாகக் காண முடிந்தது. கடைசியாக இரண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சி எவ்வாறு அவர்களுக்கு இருந்தது என்று அனைவரின் முன்பும் சொல்லி கைதட்டல்களை பெற்றனர். அங்குள்ள பள்ளி ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சிக்கு உதவினர். அப்படியே அமர்சேவா சங்கத்தின் நிர்வாகி திரு.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து விட்டு வந்தேன். அவர்களுக்கு என் நன்றிகள். இந்த மாணவர்களை மேலும் மேலும் ஊக்குவித்தால் நிச்சயம் இவர்களால் அறிவியலில் மிக சிறப்பான இடத்தை அடைய முடியும்.   

இரண்டவது நிகழ்ச்சி: வௌவால்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புகைப்பட கண்காட்சி. 
இடம்: அமர் சேவா சங்கம், ஆய்குடி, தென்காசி.
இந்த நிகழ்ச்சி வௌவால்கள் புகைப்பட கண்காட்சியுடன் துவங்கியது. கண்காட்சியை திருமதி. G.S.விஜய லக்ஷ்மி அவர்கள் திறந்து வைத்து பேசிவிட்டு வௌவால்கள் படங்களை பார்த்து விட்டு சென்றனர்.  பின்பு நான் இந்த சங்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு வௌவால்கள் பற்றிய வகுப்பை துவக்கினேன். நான் இதில், வௌவால்கள் என்பவைகள் பாலுட்டி வகையை சேர்ந்தவைகள்; உலகத்தில் இவை மட்டும்தான் பறக்கும் பாலுட்டிகள்உலகில் நான்கில் ஒரு பங்கு பாலூட்டிகள் வௌவால் போன்ற செய்திகள் அல்லாமல் மேலும் கீழ் காணும் பலவித செய்திகளையும் மிக சுலபமாக புரியும் வண்ணம் விளக்கினேன். 





*** வௌவாலில் இரண்டு வகை உள்ளது, 1. பழம்தின்னி வௌவால்கள் 2. பூச்சிஉண்ணும் வௌவால்கள்
*** பூனையை போல இந்த வௌவால்கள் தன்னை தானே சுத்தம் செய்துகொள்ளும்
*** இந்த உலகில் சுமார் 50 மில்லியன் வருடமாக இந்த வௌவால்கள் உள்ளது. 
*** கடந்த சில வருடமாக வேகமா அழியும் காடுகளும், சாலையோர மரங்களும் இந்த வௌவால்கள் எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 
*** மேலும் பருவநிலை மாற்றமும், வாழிட அழிப்பும் (கோவில்களிலிருந்து வௌவால்கள் துரத்தத்படுதல்) ஒரு காரணமாகும் 
*** வௌவால்கள் கூட்டம் கூட்டமாக வாழும் சமுதாய விலங்கு. 
*** நாம் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால், நம்மிடையே இந்த வௌவால்கள் இருப்பதுதான். ஏனெனில் இந்த வௌவால்கள் மனிதனுக்கும், இந்த சூழலுக்கும் அதிகமான நன்மைகளை செய்கிறது.
*** இந்த வௌவால்கள் தன் எடையை விட மூன்று மடங்கு எடை உணவை உண்ணும்.
*** வௌவால்கள் முப்பது வருடம் வரை வாழும் 
*** Bumble Bee Bat, இது உலகத்திலே மிக சிறிய வௌவால். இது தீப்பெட்டிகுள் செல்லும் அளவு சிறியது. 
*** வயல்வெளிகள், விளைநிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் உள்ள பூச்சிகளை பிடித்து உண்ணும். 
*** இந்த அதிசய பாலுட்டிகள் ஒரு மணிநேரத்துக்கு சுமார் 600 - 1000 பூச்சிகளை பிடித்து உண்ணும். 
*** இவை விதை பரவலிலும், மகரந்த சேர்க்கையிலும் மிகச் சிறப்பான பங்கு வகிக்கிறது.
*** பல நாடுகளில் வௌவால்கள் நல்ல சகுனத்தின் அடையாளமாக உள்ளது
*** உலகில் உள்ள பெரிய வௌவாலின் இறக்கை அளவு ஆறு அடி ஆகும் 
*** உலகத்தில் மொத்தம் 1116 வகை வௌவால்கள் உள்ளது, அதில் 117 வௌவால்கள் இந்தியாவில் உண்டு. 

இந்த குழந்தைகளுக்கு காட்டுயிர் மற்றும் உலகின் பெரிய வௌவால் வீடியோவை காட்டினேன். அவர்களில் பலபேர் என்னிடம் சொன்னார்கள், நீங்கள் வகுப்பில் பேசியதைவிட வீடியோ மூலமாக சொன்னவை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது என்று. இந்த மாணவ மாணவிகள் பலரும் மிகச் சிறப்பான உற்று நோக்கும் திறம் உள்ளது. 
கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை சூழல் மேல் அக்கறை உள்ள சிறந்த குழந்தைகளாக மாற்றி விட வேண்டும் என்பதுதான் என் ஆசை. 

நன்றிகள்:
இந்த இரண்டு நிகழ்ச்சியும் அனைவரின் ஒத்துழைப்போடும் மிக சிறப்பாக முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு உதவ என் நண்பன் மாரி முத்துவும் வந்தது மகிழ்ச்சியை தந்தது. இரண்டு நிகழ்சிகளும் சிறப்பாக நடக்கவும் எல்லா வித உதவிகளையும் அமர் சேவா சங்கமும், உயர் திரு. ராமகிருஷ்ணன் அய்யாவும் (சிவ சரஸ்வதி வித்யாலயா) செய்திருந்தார்கள். நன்றிகள். வௌவால் புகைப்படங்களை நமக்காக இலவசமாக, அச்சு செய்து வழங்கிய என் நண்பன் உயர் திரு. ஹரி பிரதான் அவர்களுக்கும் என் நன்றிகள்.
நமது சிறிய முயற்சியும் நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரலாம் ! 

பிரவின் குமார் 
கோயம்புத்தூர்
Save nature otherwise no future

0 comments:

Post a Comment