About

Friday 31 January 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் XI
நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாவது சுற்றுச்சூழல் பரப்பு மையம் தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள மஞ்சம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12.01.2014 அன்று திறக்கப்பட்டது. தில் திரு. மல்லேசப்பா (சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு அரசு), மாவட்ட கலெக்டர் திரு. கருணாகரன் மற்றும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் திரு. செந்தூர் பாண்டியன் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பரப்பு மையத்தை திறந்து வைத்தனர்.   இந்த நிகழ்ச்சியை திருமதி. G..S. விஜயலட்சுமி அவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.




இந்த பரப்பு மையம் திறக்கப்பட்ட நாளே, முதல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்சிக்காக நான் சென்றிருந்தேன். சுமார் 22 மாணவ-மாணவிகள், 5 ஆசிரியர்கள் இருந்தனர்.  டாக்டர். G..S.. விஜயலட்சுமி அவர்கள் அறிமுக உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. நான் எப்போதும் போல அனைவரின் பெயர், வகுப்புகளை கேட்டு தெரிந்து விட்டு, அவர்கள் பார்த்த நன்னீர் உயிரினங்களை கேட்டேன். பின்பு மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நன்னீர் ஆதாரங்களையும், இங்குள்ள பலவகைப்பட்ட தாவர, விலங்குகளையும் பற்றிச் சொனேன். நன்னீர் பல்லுயிரியம் என்றால் என்ன? என்பதை சொல்லிவிட்டு "attitude assessment" என்ற நிகழ்வை நான் வகுப்பிற்கு வெளியில் நடத்தினேன். நன்னீர் சூழல் பற்றியும், நம் மலைகளை பற்றியும் கேட்கப்பட்ட பலவகைப்பட்ட கேள்விகளுக்கு இந்த குழந்தைகள் மிக அழகாக பதிலளித்தனர். பின்பு ஒவொரு உயிரினத்தில் முக்கியதுவத்தை விளக்கும் பொருட்டு "உசந்த மரத்தாலே" என்ற நாட்டுப்புறப் பாடலை பாடிவிட்டு பங்கேற்பாளர் அனைவரையும் ஐந்து குழுக்களாக பிரித்துவிட்டு 'வரைபடத்தைச் சேர்த்தல்' என்ற நிகழ்வை நடத்தினேன். இதில் ஓவ்வொரு குழுக்களிடத்திலும் மேற்குத்தொடர்ச்சி மலையின் பல்லுயிர் செறிவு பகுதியின் வரைபட துண்டுகளை கொடுத்து இணைக்க சொன்னேன். மேலும் இந்த வரைபடத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ள ஆறு மாநிலங்களின் பெயர்களை எழுத சொன்னேன். எல்லாக் குழுக்களும் மிக சிறப்பாக இணைத்திருந்தனர். பின்னர் அனைத்து குழுக்களுக்கும் "ஆறுகள்" துண்டாக்கபட்ட வரைபடத்தை கொடுத்து இணைக்கச் சொன்னேன். அனைவரும் வரைபடத்தை இணைந்தனர். இதில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகளின் பெயர்களை எழுத சொன்னேன். மிக சிரமப்பட்டு எழுத முயற்சி செய்தனர். நான் உதவி செய்து எழுதச் செய்தேன். பின்னர் நான் மேற்குத் தொடர்சிமலையில்  உற்பத்தியாகும் ஆறுகளின் பட்டியலை கூறினேன்.



பின்னர் இந்த மலையில் உள்ள பாலுட்டிகள், பறவைகள், ஊர்வன, இருவாழ்விகள் மற்றும் மீன்களின் எண்ணிக்கையையும், எவை எவை நம் மலையில் மட்டுமே காணக்கூடியவை என சொன்னேன்.  நன்னீர் வகைகளை பற்றி சொல்ல அட்டைகளை பயன்படுத்தினேன். பின்பு உயிரினங்களின் வகைப்பாடு  என்ற செயல்முறையையும் அட்டையை பயன்படுத்தி நான்கு குழுக்களுக்கிடையில் வெற்றிகரமாக செய்து முடித்தேன். பின்பு இன்றைய வகுப்பில் பார்க்கபோகிற நான்கு முக்கிய குழுக்களான 1. நன்னீர் மீன்கள் 2. தாட்டான்கள் 3. நத்தைகள் 4. நன்னீர் தாவரங்கள். பின்பு ஏன் நன்னீர் உயிரினங்களை பாதுகாக்கணும் என்றும், எவை இந்த உயிரிகளை அச்சுறுத்துகின்றன என்றும் சொன்னேன்.  




அப்புறமாக, நன்னீர் மீன்கள், தட்டான்கள் படம் போட்ட போஸ்டர் காட்டி அவர்கள் பகுதியில் அவர்கள் பார்த்த நன்னீர் உயிர்கள் பெயர்களை சொன்னார்கள்.  
பின்பு விலங்கு வெளிக்கள அமைப்பு வழங்கிய நன்னீர் உயிரின தகவல் பெட்டகத்தை  அனைவர்க்கும் வழங்கினேன். அதில் உள்ள புத்தகத்தில் உள்ள மீன்கள் மற்றும் தட்டான்களின் வாழ்க்கை சுழற்சியை படிக்க சொன்னேன். நான்  கருத்துக்களை பகிர்ந்து விட்டு பின்பு அனைவரும் தகவல் பெட்டகத்தில் உள்ள "ராக்கியை" அருகில் உள்ளவரின் கைகளில் கட்டி விட்டு, எழுந்து நின்று நன்னீர் உயிரினங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொன்டனர்.



இறுதியாக G..S.. விஜயலட்சுமி அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள். குழு நிழற்படத்துடன் இந்த நிகழ்ச்சி இங்கு நிறைவு பெற்றது. 



எல்லா குழந்தைகளும் மிக ஆர்வமாக கலந்து கொண்டனர். மிகக் குறிப்பாக இரண்டு குழந்தைகள் அதிகமாக பேசியும், கேள்விகள் கேட்டும் மிக உற்சாகமாக கலந்துகொண்டனர்.
சிறப்பு நன்றி: Zoo Outreach Organization இந்த நிகழ்ச்சிக்காக நன்னீர் தகவல் பெட்டகத்தையும், வண்ண போஸ்டர்களையும் வழங்கி உற்சாகப்படுத்தியது. இவர்களின் ஆதரவும், உத்வேகமும் இன்னும் நம் உயிரினங்களை பாதுகாக்க பல நிகழ்ச்சிகளை வடிவமைக்க உதவும்.    
மேலும் இந்த நிகழ்ச்சிக்காகவே வெகு தொலைவில் இருந்து வந்து எனக்கு உதவிய என் நண்பர்கள் திரு. மாரி முத்து மற்றும் திரு. செல்வம் அவர்களுக்கு நன்றி.

சில பகிர்தல்கள்: (மாணவிகள் சொன்னது)
1. இந்த வகுப்பு எங்களுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையை பற்றி பல புதிய தகவல்களை வழங்கியது.
2. இது நம்ம சயின்ஸ் கிளாஸ் போல போர் அடிக்க வில்லை. வகுப்பை கவனிக்கவே ஆர்வமாக இருந்தது.
3. மிக எளிமையான உதாரணங்களுடன் நன்னீர் உயிரினங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
4. வரைபட activity புரிய மிக சுலபமாக இருந்தது.

எல்லாம் முடித்துவிட்டு கிளம்பும் முன் பல மாணவிகள் என்னிடம் கேட்டனர் "சார், அடுத்த வகுப்பு எடுக்க எப்போ சார் வருவீங்க? நான் சீக்கிரமே…………… எனச் சொல்லிவிட்டு, G..S. விஜயலட்சுமி அவர்களை சந்தித்துவிட்டு கிளம்பினேன்.    

நன்றியுடன்

பிரவின் குமார்

0 comments:

Post a Comment