ஒரு நாள் சர்வதேச பல்லுயிரிய கருத்தரங்கு
ஸ்ரீ நாராயண குரு பெண்கள் கல்லூரி, கொல்லம் 

கடந்த பிப்ரவரி மாதம் 25ல் கேரளாவின் கொல்லத்தில் உள்ள ஸ்ரீ நாராயண குரு பெண்கள் கல்லூரியில் ஒரு நாள் சர்வதேச பல்லுயிரிய கருத்தரங்கிற்கு சென்றேன். சுமார் 65 பேர் கலந்து கொண்டனர். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் வளங்களை சொல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சிறிய புகைப்பட கண்காட்சி, வினாடி வினா நிகழ்ச்சி, தொடர்ந்து கருத்தரங்க மைய பேச்சு என சிறப்பாக நிகழ்வை முடித்து விட்டு வந்தேன். இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு உதவிகள் செய்ய வந்த எனது அருமை நண்பண் கலைமணி அவர்களுக்கு என் நன்றிகள்.               

அன்புடன், 
பிரவின் குமார் 
Read More …

Categories:

மகாத்மா காந்தி மெட்ரிக்குலேசன் பள்ளி மரக் கன்று 
வழங்கும் நிகழ்ச்சி

கடையநல்லூர், தென்காசி
  
கடந்த வருட செப்டம்பர் முதல் இந்த 2016 சனவரி முடிய நான் சீனாவில் இருந்தேன். அதனால் என்னால் நமது தமிழகத்தில் சுற்றுச்சூழல் வகுப்புகளை ஏற்பாடு செய்வதில் சிறிது தொய்வு ஏற்ப்பட்டது. கடந்த பிப்ரவரியில் கடையநல்லூர் மகாத்மா பள்ளிக்கூடத்தில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியை தென்காசி எக்ஸ்னோரா தலைவி. திருமதி.G.S.விஜய லக்ஷ்மி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னை மரங்கள் பற்றி பேச அழைத்திருந்தார்கள். 
நிகழ்ச்சி காலையில் ஆரம்பமானது. வழக்கமான அறிமுக உரையுடன் ஆரம்பமாகி, பின்பு மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்தது. பள்ளி பயிலும் மாணவ மணிகளுக்கு நாட்டு மரக் கன்றுகளை வழங்கினார்கள். துணிப் பைகளுடன் மாணவர்கள் மரங்களை பெற்றுகொண்டனர். அப்படியே அவர்களுக்கு ஒரு சிட்டுக் குருவி கதை மூலமாக வங்காரி மாதாய் பற்றி சொல்லிவிட்டு, மரங்கள் பற்றியும் சொன்னேன். அவர்கள் வீட்டில் பார்த்த, காட்டில் பார்த்த மரங்கள் பற்றியும் சொல்லிவிட்டு, மரங்கள் மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா வகை பறவை, பூச்சிகளுக்கும் ஒரு இருப்பிடமாக உள்ளது என்பதை விளக்கி விட்டு சில காணொளிகளைக் காட்டினேன். 

பின்பு அவர்களிடம் சிறிது பேசிவிட்டு, சோலை காடுகளை காப்போம் என்ற காணொளியைக் காட்டிவிட்டு  ஒரு சூழல் உறுதிமொழியுடன் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டேன். 

  


நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எக்ஸ்னோராவிற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும், இந்த நிகழ்ச்சிக்காக பாப்பான்குளத்தில் இருந்து வந்த எனதருமை நண்பன் கிட்டுவிற்கும் எனது நன்றிகள்.       

அன்புடன் 
பிரவின் குமார் 
Read More …

Categories:

அம்பை - லயன்ஸ் நிகழ்ச்சி: 

அம்பாசமுத்திரம் லயன்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சயில் பேச வாய்ப்பு கிடைத்தது. ஒரு சிறிய புகைப்பட கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தேன். தொடர்ந்து சூழல் கரிசனம் என்ற தலைப்பில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டேன். 
இந்த நிகழ்ச்சிக்காக என்னை அழைத்த திரு.லக்ஷ்மி நாராயண ராஜா மற்றும் திருமதி.மீனா ராஜா அவர்களுக்கு நன்றிகள்.
அன்புடன் 
பிரவின்          

Read More …

Categories:

கோ.வெங்கிடசாமி நாயுடு கல்லூரி நிகழ்ச்சி, கோவில்பட்டி

நான் கோவில்பட்டி கோ.வெங்கிடசாமி நாயுடு (GVN) கல்லூரி தாவரவியல் துறையில் நடத்திய இரண்டாவது நிகழ்ச்சி 14.8.2015 அன்று நடைபெற்றது. முதல் நிகழ்ச்சி 27 பிப்ரவரி 2012 ல் நன்னீர் தாவரங்கள் குறித்து பேசி இருந்தேன். மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே கல்லூரிக்கு சென்றதில் மகிழ்ச்சி.   
இம்முறை, தாவரவியல் வேலை வாய்ப்புகள் குறித்தும், ஆராய்ச்சியின் அவசியம் குறித்தும் சொன்னேன். 


தாவரவியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்களுக்கும், மாணவ மணிகளுக்கும் என் நன்றிகள்.     

அன்புடன் 
பிரவின் 
Read More …

Categories:

அம்பை - ரோட்டரி நிகழ்ச்சி 

திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக எனது பேராசிரியர்.திரு.விஸ்வநாதன் அவர்கள் என்னை அழைத்திருந்தார்கள். 
நான் சூழல் பாதுகாப்பு பற்றியும், சில விலங்குகள் அழிவின் நிலையில் உள்ளதை பற்றியும், சில களப் பணிகளில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளையும் சொன்னேன். மேலும் விலங்குகள் மீதான தவறான கருத்தை மாற்றும் படியாகவே நிகழ்ச்சி இருந்தது.
எனது சிறு வயது முதலே என்னை சூழல் மீதான செயல்பாட்டில் ஈடுபடுத்தி, என்னை ஊக்கப்படுத்திய எனது பசுமை பேராசிரியர்.திரு.விஸ்வநாதன் அவர்களுக்கு என் நன்றி.               

அன்புடன் 
பிரவின் குமார்  
Read More …

Categories:

நம்மைச் சுற்றி விலங்குகள் - பள்ளிக்கூட நிகழ்ச்சி 
புனித சவரியார் பள்ளி - பாளையங்கோட்டை

கடந்த 10.08.2015 அன்று புனித சவரியார் பள்ளியில் ஒரு வனவிலங்குகள் குறித்த நிகழ்ச்சிக்காக பள்ளி தமிழ் ஆசிரியர் திரு.பாக்கியநாதன் அவர்கள் அழைத்திருந்தார்கள்.    

நம்மூர் விலங்குகள் பற்றியும், அயல் நாட்டின் சில விலங்குகள் பற்றியும் சொன்னேன். சில விளையாட்டுகள், பாடல்கள், படங்கள் மூலமாக சில சிறந்த தகவல்களை சொல்லி, அவர்களுக்கு காட்டுயிர் கரிசனத்தை தூண்டி விட்டு வந்தேன்.       

இந்த நிகழ்ச்சியில் மாணவ கண்மணிகளை நான் அதிகம் பேச வைத்தேன்.  

நன்றிகள் திரு.பாக்கியநாதன் அவர்களுக்கு.  Zoo Outreach அமைப்பு தகவல் பெட்டகத்தை வழங்கி உதவியது.  

அன்புடன் 
பிரவின் 
சீனா 


Read More …

Categories:G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். 

இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு மணி நேர வௌவால் வகுப்பை நடத்தினோம். வெளவால்களின் வகைகள், வாழிடம், உலகின் பெரிய, சிறிய வெளவால் என தொடர்ந்து, அவற்றின் சிறப்பியல்புகளை பற்றி சொன்னேன். 10 நிமிட இடைவெளிக்கு பிறகு வௌவால் நன்மைகள் குறித்தும் அவைகளுக்கும் மரங்களுக்கும் உள்ள தொடர்பை சொல்லி முடித்தேன். 


   நன்றி

   அன்புடன் 
   பிரவின்   
Read More …

Categories:

Labels